டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஸ்ரேல் - அமீரகம் டீலிங்.. இந்தியாவிற்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு அமையாது.. இனி புகுந்து விளையாடலாம்

Google Oneindia Tamil News

டெல்லி : இஸ்ரேல் மற்றும் அமீரகம் இடையே செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இனி இந்தியா மிக முக்கியமான காரியங்களை சர்வதேச அளவில் சாதிக்க முடியும். சீனா, பாகிஸ்தான் செய்ய முடியாத சில விஷயங்களை இந்தியா சாதிக்க முடியும்.

கொரோனா பாதிப்பிற்கு இடையே உலக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. சீனாவிற்கு எதிரான உலக நாடுகளின் மோதல் ஒரு பக்கம் இருக்கையில் இன்னொரு பக்கம் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மேற்பார்வையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

எனக்கு பதவி ஒரு பொருட்டே இல்லை... மரியாதை தான் முக்கியம்... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிஎனக்கு பதவி ஒரு பொருட்டே இல்லை... மரியாதை தான் முக்கியம்... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

என்ன ஒப்பந்தம்

என்ன ஒப்பந்தம்

மத்திய கிழக்கு நாடுகளின் மிக சக்தி வாய்ந்த கூட்டமைப்புதான் ஐக்கிய அரபு அமீரகம். இன்னொரு பக்கம் உலகின் மிக வேகமாக வளர்ந்த, அதீத ராணுவ மற்றும் ராஜாங்க சக்தி கொண்ட நாடுதான் இஸ்ரேல். இரண்டு நாடுகளும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் கசப்பை மறந்து ஒன்றாக செயல்பட முடிவு செய்துள்ளது. உலக அரசியலில் இது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

முக்கியம்

முக்கியம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் கூட்டாக இந்த ஒப்பந்தத்தை செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் பாலஸ்தீனத்தில் இனி இஸ்ரேல் ஆக்கிரமிப்பை செய்ய கூடாது. பாலஸ்தீனத்தில் இன்னும் 17% நிலத்தை இஸ்ரேல் கேட்டு வந்த நிலையில், அந்த ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்த போவதாக ஒப்பந்தம் செய்துள்ளது.

உறவு மேம்படும்

உறவு மேம்படும்

இதற்கு கைமாறாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ, பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இனி இஸ்ரேல் மேற்கொள்ள முடியும். அதாவது இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உறவுகளை மேற்கொள்ள முடியும். இதுதான் இந்த டீலிங்கின் குறிக்கோளாகும். பாலத்தீனம் இந்த டீலிங்கை நம்ப முடியாது, அமீரகம் எங்கள் முதுகில் குத்திவிட்டது என்று கூறியுள்ளது.

ஓமான் என்ன சொன்னது

ஓமான் என்ன சொன்னது

இந்த ஒப்பந்தத்தை ஓமான், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டன், இந்தியா ஆகிய நாடுகள் வரவேற்று இருக்கிறது . சவுதி இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனாலும் சவுதி இந்த ஒப்பந்தம் காரணமாக சந்தோசத்தில் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஈரான் கடுமையாக எதிர்த்து இருக்கிறது. அதேபோல் துருக்கி, சிரியா ஆகிய நாடுகளும் இதை எதிர்த்து இருக்கிறது.

சாதனை செய்தது

சாதனை செய்தது

இஸ்ரேல் மற்றும் அமீரகம் இடையே செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இனி இந்தியா மிக முக்கியமான காரியங்களை சர்வதேச அளவில் சாதிக்க முடியும். சீனா, பாகிஸ்தான் செய்ய முடியாத சில விஷயங்களை இந்தியா சாதிக்க முடியும். மொத்தம் மூன்று விதமான விஷயங்களை இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா சாதிக்க முடியும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமீரகம் எப்படி

அமீரகம் எப்படி

இந்தியா அமீரகம் உடன் ராணுவ ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். முன்பு அமெரிக்கா , இஸ்ரேலின் கோபத்திற்கு உள்ளாக கூடாது என்று இந்தியா ராணுவ ஒப்பந்தங்களை செய்யாமல் இருந்தது . இனி அமீரகம் உடன் ராணுவ ஒப்பந்தம் , ராணுவ தளவாட இறக்குமதி , கூட்டு பயிற்சி போன்ற ராணுவ ரீதியான உறவுகளை இந்தியா எளிதாக மேற்கொள்ள முடியும்.

பாகிஸ்தான் உறவு

பாகிஸ்தான் உறவு

அடுத்ததாக இந்தியா ஏற்கனவே இஸ்ரேல், அமெரிக்கா , சவுதிக்கு நட்பு நாடு. சவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது மோதல் நிலவுகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் மோதல் நிலவுகிறது. இதனால் இந்தியா - இஸ்ரேல் - அமெரிக்கா - அமீரகம் - சவுதி என்ற வலுவான கூட்டமைப்பை பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக இந்தியா உருவாக்க முடியும். இது உலக அரசியலில் மிக முக்கியமான கூட்டமைப்பாக இருக்கும்.

மார்க்கெட் பிடிப்பு

மார்க்கெட் பிடிப்பு

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனா தனது பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு பதிலாக இந்தியா இந்த நாடுகளின் மார்க்கெட்டை பிடிக்கலாம். அமீரகம், சவுதி உடன் பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். அந்த நாடுகளுக்கு இந்தியா நேரடியாக ஏற்றுமதி செய்து தனது உற்பத்தியை பெருக்க முடியும்.

இனி யோசனை

இனி யோசனை

முன்பு மத்திய கிழக்கு நாடுகள் உடன் உறவை மேற்கொள்ளும் முன் இந்தியா ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் இனி அமெரிக்கா, இஸ்ரேல் பயம் இல்லாத காரணத்தால் மிக எளிதாக இனி இந்தியா ஒப்பந்தங்களை செய்ய முடியும்.பொருளாதார ரீதியாகவும் இது உதவும் , பாதுகாப்பு ரீதியாகவும் இது இந்தியாவிற்கு உதவியாக மாறும், என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள் .

English summary
India can do magic and wonders with the United Arab Emirates and Israel deal for peace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X