இந்தியா - சீனா 10வது சுற்றுப் பேச்சுவார்த்தை... நிரந்தரமாக முடிவுக்கட்ட திட்டம்
டெல்லி: இந்தியா - சீனா நாடுகள் இடையே நாளை(பிப்.20) ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு (LOC) பகுதியில் தொடர்ந்து சீனா அத்துமீறி வந்ததால், இந்தியா பதிலடி கொடுக்க நேரிட்டது. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் அங்கு போர்ப்பதற்றம் நிலவியது. இதனால், அங்கு அமைதியை ஏற்படுத்த இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

அதன் பயனாக கிழக்கு லடாக்கில் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தென்கரைகளில் இருந்து இரு தரப்பு படைகளையும் திரும்பப் பெறுவது என சமீத்தில் இந்திய, சீன ராணுவம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை இரு தரப்பும் தொடங்கின. சீன துருப்புகள் அங்கிருந்து வெளியேறுவதையும், அவர்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்குகுழிகளை அழிப்பதையும் காட்டும் வீடியோவை இந்திய ராணுவம் சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நாளை(பிப்.20) 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதிகாரிகள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தையில், பல்வேறு முக்கிய உடன்படிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு லடாக்கில் துருப்புகளை குவிக்கும் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்த வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications