India - China Trade: டிரம்புக்கு விழும் அடி.. சீனாவுடன் வர்த்தகத்தை தொடங்கும் இந்தியா! வெளியான முக்கிய அறிவிப்பு.. செம

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். அதேபோல் சீனாவும், டிரம்பின் வரி விதிப்பில் இருந்து தப்பவில்லை. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும், சீனாவும் கைகோர்த்துள்ளன. இருநாடுகள் இடையே 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட வர்த்தகம் மீண்டும் தொடங்க உள்ளதை நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

டெல்லியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும். அந்த வகையில் இன்று மத்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

india-china-trade-india-is-working-with-china-to-resume-trade-through-border-says-external-affai

அப்போது இந்தியா - சீனா இடையே நிறுத்தப்பட்ட வர்த்தகத்தை மீண்டும் தொடங்க உள்ளதாகவும், இருநாடுகளின் எல்லை வழியாக இந்த வர்த்தகத்தை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

சீனாவுடன் பேச்சுவார்த்தை

சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் கணவாய், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் மற்றும் சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் உள்ளிட்டவற்றின் வழியாக வர்த்தகத்தை மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் வேறு ஏதேனும் அப்டேட்டுகள் இருந்தால் உங்களுக்கு தெரிவிப்போம்'' என்றார்.

இந்த கணவாய் வழியாக இந்தியா - சீனா இடையே தரைவழி வர்த்தகம் நடந்து வந்தது. இருநாடுகள் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் இந்த பகுதிகள் வழியாக வர்த்தகம் நடைபெறுவது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்க உள்ளது.

எல்லை பிரச்சனை பற்றி மீட்டிங்

மேலும் இந்தியா - சீனா இடையே அடுத்த வாரத்தில் முக்கிய மீட்டிங் நடைபெற உள்ளது. இருநாடுகள் இடையே நிலவும் எல்லை பிரச்சனை பற்றி இந்த மீட்டிங்கில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மீட்டிங்கிற்காக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ ஆகஸ்ட் 18 ம் தேதி நம் நாட்டுக்கு வர உள்ளார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இருவரும் இந்தியா - சீனா எல்லை பிரச்சனை பற்றி பேசி தீர்வை நோக்கி நகர உள்ளனர்.

நம் நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு கடந்த 5 ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நம் நாட்டின் படை வீரர்களும், சீனாவின் படை வீரர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதலை தொடர்ந்து இருநாடுகளின் உறவில் விரிசல் விழுந்தது. கடந்த 5 ஆண்டுகளாக இருநாடுகள் இடையே பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ நம் நாட்டுக்கு வர உள்ளார்.

சீனா செல்லும் மோடி

அதுமட்டுமின்றி தற்போது இந்தியா - சீனா இடையேயான மோதல் தீர்வை நோக்கி செல்கிறது. இருநாடுகள் இடையே நேரடி விமானங்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு தகவல் அனுப்பி உள்ளது.

அதேபோல் இந்த மாத இறுதியில் சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இவர் 2020ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனா செல்ல உள்ளார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்திக்க வாய்ப்புள்ளது.

ஒன்றிணைத்த டிரம்ப்

கடந்த 5 ஆண்டுகளாக எதிரும், புதிருமாக இருந்த இந்தியா - சீனாவை ஒருங்கிணைத்தது யார் என்றால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான். டிரம்ப் அதிபரானது முதல் சீனாவுக்கு தொடர்ந்து வரிகளை தீட்டினார். மொத்தம் 145 சதவீதம் வரை வரிகளை விதித்தார். இதனால் கோபமான சீனா பதிலுக்கு வரியை விதித்தது. அதோடு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியை குறைக்க தொடங்கியது. இதனால் பயந்துபோன டிரம்ப் சீனாவுக்கு 30 சதவீத வரிகளை மட்டுமே போட்டார். பிற வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

மேலும் சீனாவுக்கு, நம் நாடு மூலமாக பதிலடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டது. ஏனென்றால் சீனாவுடன் நமக்கும் பகை இருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்த அமெரிக்கா விரும்பியது. இப்படியான சூழலில் தான் அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவுடனான நட்பு மற்றும் அங்கிருந்து கச்சா எண்ணெயை சலுகை விலையில் வாங்குவதை டிரம்ப் விரும்பவில்லை. இதனால் நம் நாட்டுக்கு 50 சதவீதகளை வரிகளை விதித்துள்ளார். இதில் முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி என்பது இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளது.

டிரம்புக்கு சிக்கல்

இப்படி இந்தியா - சீனாவை குறிவைத்து டிரம்ப் செயல்படும் நிலையில் அவருக்கு ‛செக்' வைக்க நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் ஏற்றுமதியை சீனாவை பயன்படுத்தி ஈடுசெய்ய நம் நாடு முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இது டொனால்ட் டிரம்புக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் நம் நாடும், சீனாவும் இணைந்தால் அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாது. இருநாடுகளிடமும் தேவையான வளங்கள், மக்கள்தொகை உள்ளன. இதனால் டிரம்ப் வரும் காலத்தில் சீனா, இந்தியாவை குறிவைக்க முடியாது. மீறி குறிவைத்தால் இருநாடுகளும் சேர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும். இதனால் சீனா - இந்தியா உறவு வலுப்பெறுவது டிரம்பின் வயிற்றில் புளியை கரைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+