அதெப்படி காஷ்மீரை பற்றி குறிப்பிடலாம்? பாகிஸ்தான்- சீனாவின் கூட்டறிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
டெல்லி: பாகிஸ்தான் - சீனா நாடுகளின் கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மத்திய பாஜக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 7-ந் தேதி சீனா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். சீனாவின் பிரதமர் லி கியாங்கை ஷபாஸ் ஷெரீப் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விவாதித்தார்.

இதனையடுத்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். பொதுவாக இருநாட்டு தலைவர்களின் சந்திப்புகளில் அந்த இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பான வாசகங்கள் இடம் பெறும். இதுதான் நடைமுறை.
ஆனால் பாகிஸ்தான் - சீனா நாடுகளின் கூட்டறிக்கையில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதியாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் எப்போதோ நிறைவேற்றிய தீர்மானங்கள், ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் - சீனா கூட்டறிக்கையில் இடம் பெற்றிருந்ததற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரத்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பாகிஸ்தான் -சீனா கூட்டறிக்கையில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து தேவையற்ற வகையில் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு மிக தெளிவானது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இது தொடர்பாக எந்த ஒரு நாட்டுக்கும் கருத்து தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை என்றார்.
மேலும் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு இடையூறுகளை உருவாக்கி அப்பகுதிகளில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் இந்திய நிலப்பகுதிகளில் தம்மை வலுப்படுத்த நினைக்கிறது. இதற்கான இதர நாடுகளின் நடவடிக்கைகளை இந்திய அரசு கடுமையாக எதிர்க்கிறது.
சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் இந்திய நிலப்பகுதிகளும் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இடம் பெற்றுள்ளதை ஏற்கவும் முடியாது என்றார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications