இந்தியாவில் கொரோனா.. ஒரு குட் நியூஸ்.. ஒரு பேட் நியூஸ் இருக்கு
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1336 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
Recommended Video
47 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18601 ஐ எட்டியுள்ளது, இதில் 14759 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

3252 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 590 பேர் இறந்துள்ளனர். அதாவது நோயால் பலியானோர் எண்ணிக்கை 600ஐத் தொடப்போகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அதிகபட்சம் 47 பேர் இறந்துள்ளனர். இதெல்லாம் பேட் நியூஸ்.
முக்கியமான குட் நியூஸ் விஷயம் என்னவென்றால், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக 705 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரித்துள்ளது, நல்ல சேதியாகும்.
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தைத் தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நாட்டில் லாக்டவுன் உள்ளது, இதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்துள்ளது.
அதே நேரத்தில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து எச்சரித்துள்ளார், இன்னும் மோசமான காலங்கள் வரவில்லை என்று கூறியுள்ளார்.
உலகளவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இதுவரை, உலகளவில் 1 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர், இந்த கொடூர கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர், அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பிரச்சினை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications