கடந்த 8 மாதத்தில் இல்லாத அளவு! இந்தியாவை மிரட்டும் கொரோனா.. ஒருநாள் பாதிப்பு கிடுகிடு உயர்வு! பலி 7
டெல்லி: இந்தியாவில் 227 நாட்களுக்கு பின்னர் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒரே நாளில் கொரோனாவுக்கு நாட்டில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா என்றும் கொடிய வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் என எதற்கும் கட்டுப்படாத கொரோனா கடைசியாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகே ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது.

அதாவது, தற்போது உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவியது. பின்னர் நாடு முழுவதுமே கொரோனா பரவல் சற்று அதிகமாகி வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், இதுவரை இல்லாத அளவாக அதாவது 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கிடுகிடுவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2082 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4309 ஆக உள்ளது.
கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், கர்நாடக மாநிலத்தில் நிலவும் பனியின் காரணமாக மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாவும், கர்நாடகாவில் வரும் 2-ந் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணியை அம்மாநில அரசு தொடங்க உள்ளது. 3-வது தடுப்பூசி போட விரும்புவோர் ஆதார் கார்டு எண்ணை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications