இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா... 2,380 பேருக்கு புதிய தொற்று பரவியதால் உஷார் - 56 பேர் மரணம்
Covid-19 Cases in India: கடந்த 24 மணி நேரத்தில் 2380 பேருக்கு புதிய தொற்று பரவியுள்ளது. 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2380 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 56 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியது. இரண்டாம் அலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என மத்திய மாநில அரசுகளின் கடும் முயற்சியினால் தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை பெரிய அளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதிகரிக்கும் கொரோனா
கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும் நான்காவது அலை வருகிற ஜூன் மாதம் தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அண்மையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

முக கவசம் அவசியம்
தடுப்பூசி, கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது, நெரிசலான பகுதிகளில் முககவசம் அணிவது உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

2380 பேருக்கு கொரோனா
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,247 பேருக்கும், நேற்று 2,067 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,49,974ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா இறப்பு 56 பேர்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 56 பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,22,062ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 14,479 ஆக உயர்ந்துள்ளது.

13,433 பேர் சிகிச்சை
தற்போது வரை இந்தியாவில் 13,433 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இதுவரை 187.07கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications