30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு.. ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை.. பூரிக்கும் பிரதமர் மோடி
டெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி துறையில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைந்து சாதனை செய்துள்ளது. இதையொட்டில் விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், ஏற்றுமதியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனை ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முக்கிய மைல்கல் என அவர் பெருமையாக கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், கொரோனாவால் முடங்கிய சிறு, குறு, நிறுவனங்கள், விவசாயிகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக ஆத்மநிர்பார் பாரத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு கடனுதவி உள்பட ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்றுமதி அதிகரிப்பு
மேலும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கான ஏற்றுமதி சதவீதம் தொடர்ந்து அதிகரிக்க துவங்கியது. இது இந்திய நிறுவனங்களுக்கு நம்பிக்கையை அளித்தன.

டிசம்பரில் சாதனை
வர்த்தக அமைச்சகத்தின் நிலவரப்பட்டி கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியா 37.29 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியை செய்தது. இது இதுவரை இல்லாத சாதனையாகும். மேலும், முந்தைய ஆண்டு டிசம்பரை ஒப்பிடும்போது இது 37 சதவீதம் அதிகமாகும். இது இந்திய வணிக பொருள் ஏற்றுமதி துறையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்தது.

9 மாதத்தில் எவ்வளவு
இதுகுறித்து கடந்த ஜனவரியில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார். அவர் கூறுகையில், ‛‛ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்த ஆண்டு இந்தியா இலக்கை அடையும் வகையில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது அழைப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனால் 2021-22 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 330 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இலக்கை அடையும் பாதையில் உள்ளோம்'' என கூறியிருந்தார்.

பூர்த்தியான இலக்கு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி இலக்கு 400 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில் தான் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில் ஏற்றுமதி இலக்கை இந்தியா தற்போது அடைந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி வாழ்த்து
‛‛இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்வதை லட்சியமாக கொண்டு இலக்கு நிர்ணயித்தது. தற்போது இந்த இலக்கு முதன் முறையாக எட்டப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்காக விவசாயிகள், நெசவாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலை நடத்துவோர், ஏற்றுமதியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இது ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முக்கிய மைல்கல்'' என குறிப்பிட்டுள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications