வறட்சியாகும் வங்கதேசம்.. கங்கை நதி நீர் ஒப்பந்தத்தில் கைவைக்கும் இந்தியா.. பாக்., விழுந்த அதே மிதி
டெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து நம் நாடு பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தானின் 22 கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானை போல் எல்லையில் நம்மை சீண்டி வரும் வங்கதேசத்துக்கு ‛செக்' வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வங்கதேசம் - இந்தியா இடையேயான 30 ஆண்டு கால கங்கை நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்மூலம் வங்கதேசம் எப்படி பாதிக்கும்? இந்தியாவுக்கு என்ன பலன் கிடைக்கும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நம் நாடு பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. கடந்த 1960ம் ஆண்டில் உலக வங்கி முன்னிலையில் நம் நாடும், பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தப்படி சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. இதன்மூலம் சிந்து நதி நீரால் பாகிஸ்தானில் விவசாயம் செழித்தது. மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியானதோடு, நீரில் இருந்து மின் உற்பத்தியும் தயாரிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் நிறுத்தம்
தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. சிந்து நதிநீரை நம்பி பாகிஸ்தானில் 22 கோடி பேர் உள்ள நிலையில் நம் நாடு தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி உள்ளது. பிரதமர் மோடியே ரத்தமும், நதி நீரும் ஒன்றாக பாய முடியாது என்று கூறினார்.
இதனால் பாகிஸ்தான் மக்கள் சிந்து நதி நீர் இன்றி தவிக்க தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது நிறுத்தியது தான். இனி சிந்து நதி நீரை பாகிஸ்தானுடன் பங்கிட்டு கொள்வது இல்லை என்று நம் நாடு தெரிவித்துள்ளது.இதனால் பாகிஸ்தான் நம் நாட்டிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. சிந்து நதி நீரை முறையாக விடுவிக்க கோரி கடிதம் மேல் கடிதத்தை எழுதி வருகிறது பாகிஸ்தான். ஆனால் நம் நாடு அதனை ஏற்கவில்லை.
வங்கதேசத்துக்கு ‛செக்’..
இதன்மூலம் பாகிஸ்தானின் கதையை நம் நாடு முடித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக தான் நம்மை சீண்டி வரும் இன்னொரு நாடான வங்கதேசத்துக்கு ‛செக்' வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை நம் நாட்டுடன் நட்பாக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த வன்முறையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடக்கிறது. இடைக்காலஅரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம்மை சீண்டி வருகிறார். சீனா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து நம்நாட்டை எதிர்க்க தொடங்கி உள்ளார். அதுமட்டுமின்றி தேவையில்லாமல் எல்லையில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார்.
கங்கை நதி நீர் ஒப்பந்தம்
இதனால் வங்கதேசத்துக்கு பாடம் புகட்ட நம் நாடு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எப்படி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து நம் நாடு பதிலடி கொடுத்ததோ அதேபோல் தான் வங்கதேசம் - இந்தியா இடையேயான 30 ஆண்டு கால கங்கை நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வங்கதேசம் எப்படி பாதிக்கும்? இந்தியாவுக்கு என்ன பலன் கிடைக்கும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இமயமலையில் உருவாகும் முக்கிய நதிகளில் ஒன்று கங்கை நதி. உத்தர காண்ட் மாநிலம் மேற்கு இமயமலை பகுதியில் இந்த கங்கை நதி உருவாகி இந்தியா, வங்கதேசத்தை செழிப்பாக்கி வருகிறது. இந்த கங்கை நதியானது உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் சென்று அங்கிருந்து வங்கதேசத்தில் நுழைந்து வளமாக்கி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த நதி மொத்தம் 2,525 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து கடலை அடைகிறது. இந்த நதி நம் நாட்டில் கங்கை என்றும் வங்கதேசத்தில் பத்மா என்றும் அழைக்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின் பின்னணி
இதற்கிடையே தான் கடந்த 1975ம் ஆண்டில் கங்கை நதியின் பாதையில் மாற்றம் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா துறைமுகத்தில் போக்குவரத்து வசதிக்காக, ஃபராக்கா என்ற இடத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணை மூலம் கங்கை நதி நீர் ஹூக்ளி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் கங்கை நதி நீர் கிடைக்காமல் வங்கதேசம் வறட்சியை எதிர்கொண்டது.
இதையடுத்து வங்கதேசம், நம் நாடு இடையே கடந்த 1996ம் ஆண்டு கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் அப்போதைய நம் நாட்டின் பிரதமர் தேவகவுடா மற்றும் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆகியோர் இடையே கையெழுத்தானது. ஷேக் ஹசீனா அப்போது தான் முதல் முறையாக பிரதமராகி இருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் என்பது கங்கை நதி நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்வது தான். அதாவது ஃபராக்கா தடுப்பணையில் 70 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் இருக்கும்போது அதனை இந்தியாவும், வங்கதேசமும் 35 ஆயிரம் கனஅடி என்ற அளவில் பிரித்து கொள்ள வேண்டும்.
வங்கதேசத்தில் தண்ணீர் பற்றாக்குறை
வறட்சி காலம் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 35,000 கன அடி நீர் இரு நாடுகளுக்கும் மாறி மாறி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை பெற வசதியாக வங்கதேச எல்லையிலிருந்து 10 கி.மீ தொலைவில் கங்கை நதியின் கிளை நதியான பகீரதி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன்மூலம் வங்கதேசம் கங்கை நதி நீர் பகிர்வு மூலம் பயனடைந்து வந்தது. இந்த ஒப்பந்தம் என்பது 30 ஆண்டுகளுக்கானது.
இதனால் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. தற்போது வங்கதேசம் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வரும் நிலையில் அந்த ஒப்பந்தத்தில் முக்கிய மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது நம் நாட்டில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. கூடுதலாக 30,000 முதல் 35,000 கனஅடி தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் இந்த கங்கை நதி நீர் ஒப்பந்தத்தை நம் நாட்டுக்கு ஏற்ப மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் வங்கதேசத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications