தாக்க தயாராக.. 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்த இந்தியா.. வரலாற்றில் இதுதான் முதல் முறை.. குறி யாருக்கு? பெரும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா தனது அணுஆயுத கொள்கையில் முக்கிய மாற்றம் செய்துள்ளது. முதல் முறையாக நம் நாடு எதிரிகளை தாக்கும் வகையில் 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அண்டை நாடுகள் உள்பட உலக நாடுகள் பதற்றமடைந்துள்ளன.

ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm Intrnational Peach Research Institute or SIPRI) உள்ளது. சுருக்கமாக 'சிப்ரி' என அழைக்கப்படும்.

india-deploys-12-nuclear-warhead-for-the-first-time-in-history

இந்த நிறுவனம் ஒவ்வொரு நாடுகளிடம் இருக்கும் ஆயுதங்கள், அதன் பலம் பற்றிய உள்ளிட்ட விஷயங்களை கவனித்து ஆய்வறிக்கை வெளியிடும். அந்த வகையில் ஒவ்வொரு நாடுகளிடமும் இருக்கும் அணுஆயுதங்கள் பற்றிய ஆய்வறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி ரஷ்யாவிடம் மொத்தம் 5,420 அணுஆயுதங்கள் உள்ளன. இதற்கு அடுத்தப்டியாக அமெரிக்காவிடம் 5,042 அணுஆயுதங்கள், சீனாவிடம் 620, பிரான்ஸ் 370, பிரிட்டனிடம் 225 அணுஆயுதங்களும் உள்ளன. இந்தியாவிடம் 190 அணுஆயுதங்ளும், பாகிஸ்தானிடம் 170 அணுஆயுதங்களும், இஸ்ரேலிடம் 90 அணுஆயுதங்களும், வடகொரியாவிடம் 60 அணுஆயுதங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டில் இந்தியாவிடம் மொத்தம் 180 அணுஆயுதங்கள் இருந்த நிலையில் தற்போது 10 அணுஆயுதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி எதிரிகளை தாக்க தயாராக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் அணுஆயுதங்களை ரெடியாக வைத்துள்ளன. ஆனால் இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அணுஆயுதங்களை சேமித்து மட்டுமே வைத்தன. இந்நிலையில் தான் தற்போது நம்நாடு தனது அணுஆயுத கொள்கையை திடீரென்று மாற்றி உள்ளது. அதன்படி முதல் முறையாக அணுஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தும் வகையில் ரெடியாக வைத்துள்ளது.

புரியும்படி கூற வேண்டும் என்றால் நம் நாட்டில் இதுவரை அணுஆயுதங்கள் சேமிப்பு கிடங்கில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அணுஆயுதங்கள் தாக்குதலுக்கு தயாராக களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்முறையாக 12 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 178 அணுஆயுதங்கள் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது.

நம் நாட்டை எடுத்து கொண்டால் இதுவரை அணுஆயுதம் தனியாகவும், அதனை கொண்டு செல்லும் ஏவுகணைகள் தனியாகவும் தான் வைக்கப்படும். ஆனால் தற்போது அணுஆயுதம் மற்றும் ஏவுகணைகள் இரண்டையும் சேர்த்து ஏவுவதற்கு தயாராக வைத்துள்ளது. அதன்படி நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து அணுஆயுதத்தை ஏவ தயாராகி உள்ளது நம் நாடு. இதனால் நம் நாடு யாருக்கு குறிவைத்துள்ளது?, நம் நாட்டின் அணுஆயுத கொள்கை மாற்றத்தின் பின்னணி பற்றி அண்டை நாடுகளையும், உலக நாடுகளையும் யோசிக்க வைத்துள்ளது.

முதற்கட்ட தகவலின்படி தற்போது உலக நாடுகள் இடையே அடுத்தடுத்து மோதல்கள் வெடித்து வருகின்றன. இதனால் நம் நாடு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் நம் நாட்டை எடுத்து கொண்டால் அணுஆயுத பயன்பாட்டு கொள்கையை முக்கிய விஷயத்தை கடைப்பிடித்து வருகிறது.

''நாங்கள் எப்போதும் ஒரு நாட்டின் மீது அணுஆயுதத்தை பயன்படுத்தமாட்டோம். எதிரிகள் அணுஆயுதம் பயன்படுத்தினால் மட்டுமே நாங்களும் பதிலடக்கு பயன்படுத்துவோம்'' என்பது தான் நம் நாட்டின் கொள்கை. இதனால் நம் நாடு பிற நாடுகள் மீது எளிதில் அணுஆயுதம் கொண்டு தாக்காது.

தற்போது உலகளாவிய பதற்றம் மற்றும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்டவற்றின் சீண்டல் மற்றும் நம் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம் என்கின்றனர் 'டிபென்ஸ்'வல்லுநர்கள். இருப்பினும் நம் நாட்டின் இந்த திடீர் மாற்றத்தை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+