"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும்
டெல்லி: மத்திய கிழக்கில் மோதல் தொடர்கிறது. இப்போது போர் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. இந்த முறை பெட்ரோல், கேஸ் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான பாதிப்பு கொரோனா போன்ற ஆபத்தை உருவாக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி மோசமான விளைவுகள் ஏற்பட்டால் அது நமது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள மோதல் சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஒர்க் பர்ம் ஹோம் உள்ளிட்ட தளர்வுகளை அறிவித்து இருந்த நிலையில், பிலிப்பைன்ஸ் அடுத்த கட்டத்திற்குப் போய் எமர்ஜென்சியை அறிவித்துள்ளது. இது கொரோனா காலத்தைப் போன்ற ஊரடங்கு அச்சத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்
இந்த முறை கொரோனா காலம் போல வைரஸ் பரவுமோ.. ஆக்சிஜன் கிடைக்குமா என்ற கேள்வி இல்லை.. மாறாக பெட்ரோல் கிடைக்குமா.. கேஸ் கிடைக்குமா என்ற கேள்வியே எழுந்துள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்களே இதற்குக் காரணமாகும். போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 40% மேல் உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வரும் அறிகுறிகளும் இல்லை. இது இந்தியா உட்பட எரிசக்தி இறக்குமதியை நம்பியுள்ள ஆசிய நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஆசிய நாடுகளின் எரிபொருள் இருப்பு அதிகபட்சம் சில வாரங்களே இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது நீடித்தால் பாதிப்புகள் மோசமாகும். கொரோனா காலத்து ஊரடங்கு போல ஓவர்நைட்டில் மொத்தமாக முடங்காது என்ற போதிலும், மெல்ல அதை நோக்கியே செல்லாம் என்றும் இதன் பாதிப்பு மோசமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நிலைமை மோசம்
இந்தியாவைப் பொறுத்தவரை நிலைமை இன்னுமே மோசமாகவே இருக்கும். இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்யில் 80%க்கு மேல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இந்தப் பாதை தடைப்பட்டுள்ளதால், அரசு உள்நாட்டுத் தேவைக்கே முன்னுரிமை அளித்து ஏற்றுமதியைக் குறைத்தது. தொழில் துறை எரிவாயு கட்டுப்படுத்தப்பட்டு, எல்பிஜி உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், எல்பிஜி விநியோகம் தடங்கலின்றி கிடைக்கக் கப்பல் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. இப்போதைய மோதல் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, மனிதாபிமான சவால்களை ஏற்படுத்துகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகவே எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா காலங்களைப் போலவே இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இப்போது பிரச்சினை இல்லை
அதேநேரம் இந்தியாவில் நிலைமை கைமீறிவிட்டது எனச் சொல்ல முடியாது.. தற்போது வரை எரிசக்தி நெருக்கடி இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். இருப்பினும், எவ்வளவு காலம் இதே நிலை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. மேலும், பெருந்தொற்று காலத்தைப் போன்ற பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம். எரிபொருள், உரம் சப்ளை குறைந்தால், போக்குவரத்து, உற்பத்தி, விவசாயம் பாதிக்கப்பட்டு, மறைமுக ஊரடங்கு விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தியாவில் எரிபொருள் சப்ளை முழுமையாக நிறுத்தப்பட்டால் கையிருப்பை எடுக்க வேண்டி இருக்கும். ஆனால், நமது நாட்டின் கையிருப்பு என்பது முழு பயன்பாட்டில் 9-10 நாட்களுக்கே போதுமானது; இது உலக அளவிலான 90 நாள் பரிந்துரையை விட மிகக் குறைவாகும். இதனால் கச்சா எண்ணெய் வரவு நின்றுபோனால் பல்வேறு கட்டுப்பாடுகள் வரலாம்.
கட்டுப்பாடுகள் வரலாம்
வெளிப்படையான ஊரடங்கு உத்தரவு இப்போதைக்கு இல்லை என்றாலும் மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்தால் அது இந்தியாவைக் கடுமையான பாதிக்கும். இதனால் எரிவாயு பயன்பாடு மற்றும் தொழில் துறை எரிவாயு கட்டுப்பாடு போன்ற ஊரடங்கு பாணியிலான நடவடிக்கையை எடுக்க வேண்டி இருக்கலாம். எரிபொருள் விலைகளில் ஒரு சிறிய உயர்வு அல்லது நீண்ட காலத் தடை ஏற்பட்டால், இந்தியா தன்னைத்தானே ஒரு தற்காலிக ஊரடங்கு நிலைமைக்குள் தள்ளிவிடும் என்ற பதட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications