ஈரான் உட்பட.. 3 நாட்டு தலைவர்களுடன் பேசிய ஜெய்சங்கர்.. திடீரென நள்ளிரவில் பறந்த அழைப்பு!
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலை குறித்து மூன்று முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் அவசரத் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ச்சி, ஜெய்சங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், தற்போதைய கள நிலவரம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்துள்ளனர். முன்னதாக, கத்தார் பிரதமருடன் பேசியிருந்தார்.

கத்தார் நாட்டின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன்? ஜெய்சங்கர் இன்று மாலை உரையாடினார். இந்த உரையாடலில், அமைதியை நிலைநாட்டுவது மற்றும் போர் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதேபோல ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஏ.பி. ஜாயித் உடன் ஜெய்சங்கர் ஆலோசித்தார். மத்திய கிழக்கில் மாறி வரும் சூழல், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதன் சர்வதேச தாக்கங்கள் குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தற்போது ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட OPEC+ நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்தத் தலைவர்களுடனான ஜெய்சங்கரின் பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
-
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications