வேணாம் ராங்கு.. நாங்க வேற மாதிரி கேங்கு! கல்லெறிந்த கனடா.. தூதர்களை அதிரடியாக வெளியேற்றிய இந்தியா!
டெல்லி: கனடாவுக்கான இந்திய தூதரையும், இரு தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெறுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளதோடு, இந்தியாவில் இருக்கும் ஆறு கனடா தூதர்களை அக்டோபர் 19ஆம் தேதி நள்ளிரவுக்குள் வெளியேற வேண்டும் என வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரச்சனை நீடிக்கிறது. சீக்கியர்களுக்கு என காலிஸ்தான் என்ற தனிநாடு வேண்டுமென்ற முழக்கத்துடன் காலிஸ்தான் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் பல பயங்கரவாத நடவடிக்கைகளிலும் இந்த இயக்கம் ஈடுபட்டது. இதனை அடுத்து இந்தியாவில் இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக கனடாவில் வசிக்கும் சீக்கியர்கள் காலிஸ்தான் கோசம் எழுப்பி வருவதோடு சில இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் கனடாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று பேசிய சீக்கியர்கள் கூட்டத்தில் காலிஸ்தான் முழக்கம் எழுப்பப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் கனடா தூதரை அழைத்து கடும் கண்டனங்களை தெரிவித்ததுஇந்தியா.
முன்னதாக சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடாவில் கொல்லப்பட்டார் இந்தியாவுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதரக உயர் அதிகாரியான சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இருப்பதாக கனடா கூறியதை அடுத்துஇரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கனடாவில் இருக்கும் இந்திய தூதர் மற்றும் சில அதிகாரிகளை இந்தியா திரும்ப பெற்றுக் கொள்வதாக அதிரடியாக அறிவித்தது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,”பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நிலவும் சூழ்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய தூதர் மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் பாதுகாப்பை தற்போதைய கனடா அரசு உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவு அளிக்கும் ட்ரூடோ அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை உள்ளது” என கூறியிருந்தது.
இதற்கிடையே கனட அரசுக்கு அடுத்த நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அதிரடி நடவடிக்கையை இந்திய வெளியுறவுத்துறை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் ஆறு கனட தூதர்களை வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்பாக அதிக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” கனடாவின், ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் - செயல் உயர் தூதர், பேட்ரிக் ஹெபர்ட் - துணை உயர் தூதர், மேரி கேத்தரின் ஜோலி - முதல் செயலாளர், லான் ரோஸ் டேவிட் ட்ரைட்ஸ் - முதல் செயலாளர், ஆடம் ஜேம்ஸ் சூப்கா - முதல் செயலாளர், பவுலா ஓர்ஜுவேலா - முதல் செயலாளர் ஆகியோரை அக்டோபர் 19, 2024 சனிக்கிழமை இரவு 11:59 மணிக்குள் அல்லது அதற்கு முன் இந்தியாவை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
Baba Vanga: பாபா வங்கா கணிப்பு: ஜூன் 8 டூ 14 வரை இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நீங்கள் எந்த ராசி? -
விட்டதை பிடித்த TCS.. பெரிய ப்ராஜெக்ட் தொக்கா சிக்கியிருக்கு.. இனி கொண்டாட்டம் தான்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications