பாக் விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த.. ஜூன் 23ம் தேதி வரை தடை நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை தற்போது ஜூன் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை, மே.23ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தற்போது தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

pakistan india Pakistan

இந்த தடையை ஆங்கிலத்தில் நோட்டம்(NOTAM) என்று கூறுவார்கள். பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஏப்.30ம் தேதி முதல் மே.23ம் தேதி வரை பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடை விதிக்கப்பட்டது ஒரு மாதம் ஆனது. இதனையடுத்து தடை தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவை போல பாகிஸ்தானும், தனது வான்பரப்பை இந்திய விமானங்களுக்கு மூடியிருந்தது. இந்த தடையை தற்போது ஜூன் 24ம் தேதி வரை நீட்டித்திருந்தது. எனவே பதிலுக்கு இந்தியாவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இந்தியா ஏப்.30ம் தேதிதான் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. ஆனாலல், பாகிஸ்தான் ஏப்.24ம் தேதியே இந்த நடவடிக்கையை எடுத்துவிட்டது. அப்போது இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியிருந்தது. இதற்கு பதிலடியாகவே பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்து. இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு போகும் விமானங்கள் அனைத்தும் பாகிஸ்தான் வான் பரப்பை பயன்படுத்த வேண்டும். அதேபோல சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு போகும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த வேண்டும்.

தற்போது இரண்டு நாடுகளும் வான் பரப்பை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு இழப்புகள் இருக்கிறதுதான். ஆனால் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. இதுவே பாகிஸ்தானுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+