ஆடிப்போன ஆட்டோமொபைல் துறை.. சீனாவை நம்பினா வேஸ்ட்! நேரடியாக களமிறங்கும் இந்தியா
டெல்லி: ஆட்டோமொபைல் துறைக்கு பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் அரிய கனிமங்கள் மற்றும் காந்தங்கள் அவசியம். ஆனால் இதன் சப்ளையை சீனா நிறுத்தியிருக்கிறது. எனவே இந்தியா சொந்தமாக கனிம வளங்களை பயன்படுத்தும் முயற்சியில் இறங்க இருக்கிறது. இந்த முயற்சி சாத்தியமானால் இந்தியா, சீனாவுக்கு போட்டியாக மாறும்.
இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளும் சீனாவின் தடையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. எனவே மொத்த உலகமும் சீனாவுக்கான மாற்றை தேடி வருகிறது. இந்த இடத்தை இந்தியா நிரப்புமா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது

விஷயம் இதுதான்
கார்கள், பைக்குகள், கனரக வாகனங்கள், குறிப்பாக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆட்டோ மொபைல் துறைக்கு அரிய காந்தங்களும், கனிமங்களும் அவசியம். அது இருந்தால்தான் வாகன உற்பத்தி முழுமையடையும். சர்வதேச அளவில் இந்த கனிம, காந்தங்கள் சப்ளையில் சீனாதான் டாப். சீனாவை தவிர வேறு சப்ளையர்கள் இருக்கிறார்கள். ஆனால், எதிர்பார்க்கிற அளவுக்கு அவர்களால் சப்ளையை செய்ய முடியாது.
எனவே இந்திய ஆட்டோமொபைல் துறையினர் கனிமங்களை இறக்குமதி செய்வதற்கு பதில், கனிமங்களால் செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்து அப்படியே அசெம்பிள் செய்து கார்களை தயாரிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் இது செலவு பிடித்த வேலை. எதிர்பார்த்த செலவுகளை விட இது 10-20 மடங்கு வரை அதிகம் காசு செலவாகும். பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வரி, பொருட்களின் விலை, இறக்குமதி கூலி, விமான கட்டணம் ஆகியையே இந்த விலை உயர்வுக்கு காரணமாகும்.
இதன் விளைவாக வாகனங்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயரக்கூடும். விலை அதிகமானால் வாடிக்கையாளர்கள் இதனை வாங்க மாட்டார்கள். எனவே ஆட்டோமொபைல் துறைகள் நஷ்டத்தை எதிர்கொள்ளும். இந்த பிரச்சனையை சமாளிக்கவே, சீன அதிகரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய ஆட்டோமொபைல் துறையின் பெரும் புள்ளிகள் முயன்று வருகின்றனர். கடந்த மாதம் சீனாவுக்கான விசாவும் இவர்களுக்கு கிடைத்து. ஆனால், இன்று வரை சீன அதிகாரிகள் இவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.
சரி இப்படியே போனால் வேலைக்கு ஆகாது, உள்ளூரில் உள்ள கனிமங்களை நாம் பயன்படுத்த தொடங்குவோம் என்று திட்டமிட்டு வருகின்றன. இதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பாசிட்டிவாக போய்க்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது லேசுபட்ட காரியம் கிடையாது. கனிமங்கள் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதை தொண்டி எடுக்க வேண்டும். இதுவரை பிரச்சனையில்லை. தோண்டி எடுக்கப்பட்ட கனிமங்களை தரம் பிரிக்க வேண்டும். இது தலைவலி பிடித்த வேலை. இந்த செயல்முறையில் வெளியாகும் கழிவுகள் ஆபத்தானவை. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. ஆக இதையெல்லாம் செய்து முடிக்க குறைந்தது 10 ஆண்டுகளாகவது ஆகும்.












Click it and Unblock the Notifications