புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி.. 40 வீரர்களுக்கு 200 தீவிரவாதிகள்.. வெகுண்டெழுந்த இந்தியா!
Recommended Video

டெல்லி: புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை இழந்த நிலையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமான படை தாக்குதல் நடத்தி தக்க பதிலடியை கொடுத்தது.
ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 75-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 வீரர்கள் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி 350 கிலோ வெடிப்பொருட்களுடன் வீரர்களின் வாகனத்தின் மீது மோதினான்.
அப்போது வெடித்து சிதறியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. 40 வீரர்களை கரித் துண்டுகளாக பெற்றது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒத்திகை
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் முழு சுதந்திரத்தை கொடுக்கிறேன். இந்தியா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போர் நடத்தும்விதமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் எல்லை கோட்டு பகுதியில் ஒத்திகை நடத்தி வந்தன.

தீவிரவாத முகாம்கள்
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 12 எண்ணிக்கையிலான மிராஜ் ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 1000 கிலோ வெடி பொருட்களை தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது வீசியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.

வெடிப்பொருள்
இந்த சம்பவத்துக்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிகின்றன. மேலும் 40 வீரர்களுக்கு பதிலாக 200- 300 தீவிரவாதிகளை இந்தியா அழித்தது. அதோடு 350 கிலோ வெடிப்பொருளுக்கு பதிலாக 1000 கிலோ வெடிப்பொருளை இந்தியா பயன்படுத்தியது.

பேய்
நட்புறவு காட்டும் இடத்தில் இந்தியா தாய்க்கு இணையாகவும் எதிரியாக பாவிக்கும் இடத்தில் பேய்க்கு இணையாகவும் இந்தியா மாறும் என்பதற்கு இது இரண்டாவது உதாரணம் ஆகும். இந்த தாக்குதல் மூலம் 40 வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications