பாகிஸ்தானுக்கு ஆதரவா? சீனாவுக்கும் ஆப்பு வைத்த இந்தியா.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்பாக சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் தொடர்ச்சியாக தவறான தகவல்களை வெளியிட்டு வந்த நிலையில், மத்திய அரசு அதன் சோசியல் மீடியா கணக்குகளை முடக்கி இருக்கிறது. கடந்த வாரமே குளோபல் டைம்ஸ் ஊடகம் இந்தியா தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்கு முன்பாக உண்மையை சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது குளோபல் டைம்ஸ் மற்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் ஆகியவற்றின் மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்திய எல்லையோர பகுதிகளான ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ஜெய்சல்மார், பூஞ்ச், குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் பாகிஸ்தான் ஏவுதளங்களை தாக்கி பதிலடி கொடுத்தது. இதனால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், உடனடியாக அமைதி பேச்சுவார்த்தைக்காக இந்தியாவை அணுகியது.
இதன்பின் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. அதேபோல் பாகிஸ்தான் மீண்டும் எல்லை மீறினால், அது இந்தியா மீதான போராகவே கருதப்படும் என்றும் இந்தியா எச்சரிக்கை விடுத்தது. இருந்தாலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் ஏராளமான பொய் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக சீன அரசு ஊடகமான சின்ஷுவா செய்தி நிறுவனம் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் ஊடகம், இந்தியாவின் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக தவறான செய்திகளை வெளியிட்டு வந்தது. இதற்கு இந்திய தூதரகம் சார்பாக உடனடியாக பதில் அளிக்கப்பட்டதோடு, தவறான தகவல்களை வெளியிடும் முன் உண்மையை சரிபாருங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து வதந்திகளை பரப்புவதாக கண்டனம் தெரிவித்ததோடு, பொறுப்பான ஊடகமாக குளோபல் டைம்ஸ் செயல்பட வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் ஆகியவை தொடர்ச்சியாக இந்தியா குறித்து வதந்திகளை பரப்பி வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் மற்றும் சின்ஹுவா செய்தி நிறுவனங்களின் சோசியல் மீடியா பக்கங்களை முடக்கி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதேபோல் துருக்கியைச் சேர்ந்த TRT WORLD என்ற நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கையும் மத்திய அரசு முடக்கி இருக்கிறது. பாகிஸ்தானில் இருந்த அனுப்பப்பட்ட டிரோன்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications