தேசிய விண்வெளி தினம்.. சந்திரயான் 3 ஆய்வு 'பொக்கிஷங்களை' சர்வதேச அளவில் பகிர்ந்தது இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சந்திரயான் 3 வெற்றி, சர்வதேச அளவில் இந்தியா மீது கவனம் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சந்திரயான் 3 ஆய்வில் கிடைத்த தகவல்களை இஸ்ரோ சர்வதேச விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்திருக்கிறது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.

Chandrayaan 3 ISRO Moon 3

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை சுற்றிய பின்னர் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது.

நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.

அதேபோல டைட்டேனியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இரும்பை போல கனமாக இல்லாமல் லேசானதாக இருக்கும். ஆனால் இதன் உறுதி திறன் அபாரமானதாக இருக்கும். எனவே இந்த தனிமத்திற்கு பூமியில் டிமான்ட் அதிகம்.

சல்பரும் வெடி மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை கொண்டு மிக குறைந்த தூரம் செல்லும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில் நிலவை காலணிப்படுத்த முயலும் போது இந்த தனிமங்கள் நிச்சயம் பயன்படும். இதையெல்லாம் கண்டுபிடித்து சொன்ன பின்னர் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் உறக்க நிலைக்கு சென்றன. நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கும் அதிகமாக குளிர் இருக்கும். எனவே உறக்க நிலைக்கு சென்ற ரோவரை மீண்டும் எழுப்ப முடியாமல் போனது.

இருப்பினும் சந்திரயான் 3 விண்கலன் 2023ம் ஆண்டு செய்த சாதனை, விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு என தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்த சாதனை நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சந்திரயான்-3க்கு வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது சர்வதேச விண்வெளி கூட்டமைப்பால், 'உலக விண்வெளி விருது' வழங்கப்பட்டிருக்கிறது. இத்தாலியின் மிலனில் 75 வது சர்வதேச விண்வெளி மாநாட்டின் தொடக்க விழாவின் போது அக்டோபர் 14 அன்று விருது வழங்கும் விழா திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய ஆக.22ம் தேதியை இந்தியா தேசிய விண்வெளி தினமாக கொண்டாடியுள்ளது. இந்நிலையில் மற்றொரு முக்கியமான தகவலை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகிர்ந்திருக்கிறார். அதாவது சந்திரயான் 3 ஆய்வு தகவல்களை இந்தியா, சர்வதேச விஞ்ஞானிகளுடன் பகிர்ந்துக்கொண்டிருகிறது என்று கூறியுள்ளார்.

"இப்படி பகிர்வதன் மூலம், நிலவு குறித்த ஆய்வு சர்வதேச அளவில் மேம்படும். இதற்காக இந்தியா, தனது தகவல்களை அர்ப்பணித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+