நமது தாமதம்தான் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படக் காரணம்.. அடுத்து என்ன செய்யலாம்? வல்லுநர் விளக்கம்
டெல்லி: உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய கொரோனா தடுப்பூசிகளை ஆர்டர் அளிப்பதில் தாமதமாகவே செயல்பட்டதாகவும், தற்போது ஆய்வுப் பணிகளில் உள்ள தடுப்பூசிகளில் மத்திய அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் நாட்டின் முன்னணி வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாகவே உள்ளது.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், தடுப்பூசிக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்களில் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா தாமதம்
இந்நிலையில் நாட்டில் தடுப்பூசிக்கு தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் பற்றி நாட்டின் முன்னணி வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் கூறுகையில், உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் தொடக்கத்திலேயே ஒரு ஆண்டிற்குத் தேவையான தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டன. ஆனால் தடுப்பூசிகளை வாங்குவதில் இந்தியா சற்று தாமதமாகவே செயல்பட்டது.

இப்போது என்ன செய்யலாம்
இப்போது நாம் தடுப்பூசிகளை வாங்க முயலும்போது, முக்கிய நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே பல நாடுகள் தடுப்பூசிகளை வாங்கிவிட்டதால், நமக்கு ஒரு சில ஆப்ஷன்கள் மட்டுமே இப்போது உள்ளன. ஜைடஸ் காடிலா, பயாலஜிக்கல் இ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளின் சோதனைகளை இந்தாண்டு இறுதியில் முடிக்கும். சோதனைகளை வெற்றிகரமாக முடிந்த பிறகு, அவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து தடுப்பூசிகளை ஒட்டுமொத்தமாகப் பெறும் வகையில் இப்போதே நாம் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

உலக நாடுகள்
பிரிட்டன், அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன், இப்படி ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அதாவது உலக நாடுகள் அளிக்கும் பணம் மருந்து நிறுவனங்கள் தங்கள் சோதனை மற்றும் ஆய்வுப் பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவும். அதற்குப் பதிலாக மருந்து நிறுவனங்கள், சோதனைகள் முடிந்த பிறகு, இந்த நாடுகளுக்கு முதலில் தடுப்பூசிகளை அளிக்கும். ஆனால், இதில் ஒரு ரிஸ்கும் உள்ளது. அதாவது தடுப்பூசிகள் சோதனையின்போது தோல்வியடைந்துவிட்டால், அந்த நாடுகளுக்குத் தடுப்பூசிகளும் கிடைக்காது, அளித்த பணமும் கிடைக்காது.

ரிஸ்க் எடுக்க வேண்டும்
நாடு பொருளாதார ரீதியில் தற்போதுள்ள சூழலில், இது போன்ற முதலீடு செய்வது சரியானதாக இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ககன்தீப் காங், "நாம் நிச்சயமாக அந்த ரிஸ்க்கை எடுக்க வேண்டும். இப்போது இந்த ரிஸ்க்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் பிரச்சினை இருக்காது. மேலும், புதுமையான ஆய்வுகளில் முதலீடு செய்வது, அடுத்து வருபவர்களுக்கு நாம் கொடுக்கும் மெசேஜ் ஆக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி பணிகள்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சீரம் நிறுவனம் 1.1 கோடி டோஸ்களையும், பாரத் பயோடெக் நிறுவனம் 55 லட்சம் டோஸ்களையும் மத்திய அரசுக்கு அளித்தது. இதன் மூலமே முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த நவம்பர் மாதமே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை 70 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications