Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய விமானப்படை ஹேப்பி.. பிரான்சுடன் ரூ.3.25 லட்சம் கோடியில் பெரிய ‛டீல்'.. 114 ரஃபேல் வருது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம்நாட்டில் விமானப்படை விமானங்கள் குறைவாக உள்ளன. இது நம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இப்படியான சூழலில் தான் பிரான்சிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை இந்தியா எடுக்கத் தயாராகி வருகிறது. இந்த ஒப்பந்தம் ரூ.3.25 லட்சம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம், விமானப்படை, கடற்படை மிகவும் முக்கியமானது. குறிப்பாக இப்போது உலக நாடுகள் இடையே மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து எல்லையில் அச்சுறுத்தல் உள்ளது.

india-likely-to-sign-114-rafale-deal-with-france-president-emmanuel-macron-by-this-month-end

சமீபத்தில் தான் நாம் பாகிஸ்தானை ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பந்தாடினோம். ஆனாலும் தொடர்ந்து எல்லையில் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

பற்றாக்குறையில் விமானப்படை

இப்படியான சூழலில் தான் நம் நாட்டில் விமானப்படையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின் விமானப்படையில் மொத்தம் 42 படைப்பிரிவுகள் உள்ளன. ஆனால் தற்போது 29 படைப்பிரிவுகளுக்கு மட்டுமே விமானங்கள் உள்ளன. இதனால் 13 விமானப்படைப்பிரிவுகளுக்கு விமானங்கள் பற்றாக்குறை உள்ளது.

114 ரஃபேல் போர் விமானம்

இந்த மாத இறுதியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நம் நாட்டுக்கு வருகை உள்ளார். அந்த சமயத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக நம் நாட்டின் பாதுகாப்பு துறையின் கொள்முதல் கவுன்சில் (DAC) 114 ரஃபேல் போர்ன விமானங்களை வாங்க ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிகாரிகள் சொல்வது என்ன?

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‛‛பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு துறை கொள்முதல் கவுன்சில், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த திட்டத்திற்கு ப்புதல் வழங்க பரிசீலனை செய்து வருகிறது.

இதற்கான கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு துறை செயலாளரின் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம், கடந்த மாதம் ரஃபேல் கொள்முதல் முன்மொழிவுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு துறை கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பீடு

இந்நிலையில் தான் பிரான்சிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் 88 ரஃபேல் போர் விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டதாகவும், 26 ரஃபேல் போர் விமானங்கள் இரட்டை இருக்கை வகையை சேர்ந்ததாகவும் இருக்கும்.

மொத்தமுள்ள 114 விமானங்களில் 18 பிரான்சிடம் இருந்து வாங்கப்படும். மீதமுள்ள விமானங்கள் நம் நாட்டில் தயாரிக்கப்பட உள்ளது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் விமானங்களில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 60 சதவீத பொருட்கள் இங்கே உற்பத்தி செய்தவையாக இருக்கும். இதற்காக ரஃபேல் விமானம் தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் நம் நாட்டின் பிற தனியார் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்பட உள்ளது.

ரஃபேல் பின்னணி

தற்போது இந்தியா வாங்க உள்ள ரஃபேர் போர் விமானம் நவீன தொழில்நுட்பம் கொண்டது. ஸ்டேண்டட் எஃப் 4 பிளஸ் (Standard F4 Plus Versions) வெர்ஷனை சேர்ந்தது. இதன்மூலம் விமானத்தை தாக்க வரும் ஏவுகணை அல்லது நம்நாட்டின் குறிப்பிட்ட இலக்கை தாக்க வானில் பறந்து வரும் ஏவுகணைகளை அழிக்க முடியும். அதேபோல் அந்த விமானத்தில் ஏவுகணைகளை சுமந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும்.

அதாவது Air to Air Missiles மற்றும் Air to Ground என்ற 2 வகையான அட்டாக்கை இந்த விமானத்தால் செய்ய முடியும். தற்போது பிரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படையில் எப்4.1 வெர்ஷன் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது நம் நாடு பயன்படுத்தும் ரஃபேல் போர் விமானங்களை ஒப்பிடும்போது இந்த விமானங்களுக்கு பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

176 ஆக அதிகரிக்கும்

இந்திய விமானப்படையில் ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. அதேபோல் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்த 36 ரஃபேல்-எம் ரக விமானங்கள் வாங்கவும் பிரான்ஸிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானப்படைக்கு மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டால், இந்தியாவிடம் உள்ள ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 176-ஆக அதிகரிக்கும்.

பாகிஸ்தான் தாக்குதலில் அதிரடி

இந்த ரஃபேல் போர் விமானம் 4.5 ம் தலைமுறை விமானங்களாகும். இப்போது 5ம் தலைமுறை விமானங்களை ரஷ்யா, அமெரிக்கா, சீனா பயன்படுத்தி வருகிறது. ரஷ்யாவும், அமெரிக்காவும் 5ம் தலைமுறை விமானங்களை நமக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளது. ஆனால் அதற்கான செலவு பலமடங்கு அதிகம். அதேவேளையில் ரஃபேல் போர் விமானம் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த தாக்குதல் துல்லியமாக நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ரஃபேல் போர் விமானங்கள் திறம்பட செயல்பட்டு பாகிஸ்தானை பந்தாடியது.

இந்த விமானங்களில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தான் மீது வீசி அழிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஸ்பெக்ட்ரா எலக்ட்ரானிக் சாதனம், பாகிஸ்தான் போர் விமானங்கள் ஏவிய பிஎல்-15 என்ற சீனா தயாரிப்பு ஏவுகணைகளை திசை திருப்பி முட்டாளாக்கியது. இப்போது போர் தொழில்நுட்ப திறனை இந்த விமானம் நிரூபித்துள்ளதால் நம் நாடு ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்க ஆர்வமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+