கொரோனாவுக்கு ஒரே நாளில் நாடு முழுவதும் 50 மருத்துவர்கள் மரணம்- இந்திய மருத்துவ சங்கம்
டெல்லி: கொரோனா 2-வது அலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் இடைவிடாமல் பணியாற்றுகின்றனர். முதலாவது கொரோனா பரவலின் போது மொத்தம் 736 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம்
தற்போதைய கொரோனா 2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் சுமார் 1,000 மருத்துவர்கள் இதுவரை மரணித்துள்ளனர்.

50 மருத்துவர்கள் மரணம்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் ஒரே நாளில் மொத்தம் 50 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனா 2-வது அலையில் இதுவரை பீகார் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 69 மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

பீகாரில் அதிகம்
கொரோனா 2-வது அலையில் உத்தரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும் டெல்லியில் 27 மருத்துவர்களும் மரணம் அடைந்துள்ளனர். டெல்லியை சேர்ந்த அனாஸ் முஜாஹித் (வயது 26) என்ற ஜூனியர் மருத்துவர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மரணம் அடைந்தார்.

மருத்துவர் சங்கம் அதிர்ச்சி
இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களில் 3% பேர் மட்டுமே 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள். மருத்துவர்களின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. இது எதிர்பாராதது; துரதிருஷ்டவசமானது என்றனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications