பிரமோஸ் ஏவுகணை வாங்க.. ஆர்வம் காட்டும் உலக நாடுகள்! தவிர்க்க முடியாத இடத்திற்கு உயர்ந்த இந்தியா!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முறையாக பிரமோஸ் ஏவுகணையை இந்தியா பயன்படுத்தியது. இந்த சக்தியை பார்த்த உலக நாடுகள் வியந்தன. இந்நிலையில் சுமார் ரூ.40,163 கோடி மதிப்புள்ள பிரமோஸ் ஏவுகணையை வாங்க இந்தியாவுடன் சில நாடுகள் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதியடையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக பிரமோஸ் ஏவுகணை பார்க்கப்படுகிறது. இது ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் என்பதால் இந்த ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிப்பது நடக்காத காரியம் ஆகும்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் முதலாக இந்த ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதன் பின்னர் 2005-2007 காலகட்டத்தில் கடற்படை, தரைப்படை, விமானப்படை ஆகியவற்றில் ஏவுகணை சேர்க்கப்பட்டது.
இது முதல் முதலாக சோதனை செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த மே மாதம்தான் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின் போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. அதன் விமானப் படைத்தளம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த தாக்குதல் மூலம் பிரமோஸ் ஏவுகணையில் சக்தியை உலக நாடுகள் கண்டு வியந்தன.
இந்நிலையில் உலக நாடுகளில் சில பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றன. குறிப்பாக இந்தோனேஷியா 40,163 கோடி மதிப்பில் இந்த ஏவுகணையை வாங்க ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்கு பின்னரே களத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த காலதாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
முதல் காரணம் இந்த ஏவுகணை மிகவும் காஸ்ட்லியானதாகும். ஒரு ஏவுகணையின் விலை சுமார் ரூ.35 கோடி வரை வரும். இதன் தாக்குதல் தூரம் 800 கிலோமீட்டர் ஆகும். அதேபோல அணு ஆயுதம் இல்லாமல் அதிக சேதத்தை இந்த ஏவுகணை ஏற்படுத்தும். எனவே குறைந்த இலக்குகளை அல்லது பலவீனமான இலக்குகளை தாக்க இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படாது.
ரஷ்யா உடன் சேர்ந்துதான் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டது என்பதால், சொந்தமாக போதுமான அளவில் ஏவுகணைகளை உருவாக்க நமக்கு கூடுதல் நேரம் ஆனது. போதுமான அளவுக்கு கையிருப்பு வைத்துக் கொண்ட பின்னர்தான் இதை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருந்தோம். எனவேதான் இந்த தாமதம் ஏற்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பிரமோஸ் ஏவுகணைக்கு ஆர்டர் கிடைத்திருப்பதன் மூலம், இந்தியா சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத நாடு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications