Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானில் புல், பூண்டு கூட முளைக்காது! இந்தியாவுடன் கைகோர்க்கும் ’உலக’ தலைகள்! குறுக்கே சீனா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் எழுந்து இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய பலம் பொருந்திய வல்லரசு நாடுகள் இந்தியாவின் பக்கம் நிற்பது பாகிஸ்தானுக்கு வரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு விவகாரங்களுக்கு பின் மிக அமைதியாக சென்று கொண்டிருந்தது காஷ்மீர். தீவிரவாத சம்பவங்கள் எதுவும் இல்லாததால் நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தியா மட்டும் அல்லாது, உலகம் முழுவதிலும் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர்.

India Pakistan us

குறிப்பாக தற்போது கோடை காலத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தனர். அப்போது அங்கு வந்த ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் பயணிகள் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதல் சம்பவத்தை நடத்தி விட்டு தீவிரவாதிகள் மறைந்த நிலையில் இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கிறது. போர் போன்ற அவசர காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அவசரகால ஒத்திகையும் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் உள்ளூர் நபர்களின் உதவியோடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அனந்தநாக், குப்வாரா, பெகல்காம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு அருகே நீலம் பள்ளத்தாக்கு வழியாக தீவிரவாதிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. காடுகளில் மறைந்து வாழ்வது எப்படி என அவர்கள் பயிற்சி அளித்ததாகவும், தீவிரவாதிகளில் ஒருவரான ஹாஷிம் மூசா பாகிஸ்தானில் சிறப்பு பாதுகாப்பு படையில் பாரா கமாண்டமாக வேலை பார்த்தவர் என்ற தகவல் பாகிஸ்தானுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தது.

இதனால் கோபமடைந்த இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப்படை, கப்பற்படை தளபதிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தாக்குதலுக்கு நாங்கள் தயார் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. முக்கிய நாடுகள் இந்தியா பக்கம் நிற்கின்றன. ஏற்கனவே இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானை அழித்து விடுவேன் பிரதமர் மோடி என் நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது, இந்தியாவுடன் ரஷ்யா நிற்கும் என உறுதி அளித்தார். இதேபோல இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அவர் இந்த விவகாரத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா பக்கம் ஜப்பான் இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.

இது மட்டுமின்றி ஏற்கனவே இந்தியாவுக்கு அரசியல் விமானங்களை வழங்கி வரும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் பக்கமே நிற்கின்றன. சீனா பாகிஸ்தானுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி செய்ய வாய்ப்பு இருந்தாலும் இந்தியா சீனாவின் மிகப்பெரிய பொருளாதாரக் கூட்டாளியாக இருக்கிறது. இதனால் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவ தயங்குகிறது. துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தால் அந்த நாடுகளால் தாங்கிக் கொள்ள முடியாது.

தற்போதைய சூழலில் போர் நடந்தாலும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல் ஆகியவை கூட்டு சேர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கலாம் என்கின்றனர் உலக பாதுகாப்பு நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+