மீண்டும் எல்லை தாண்டி வந்த பாக். ட்ரோன்கள்! இடைமறித்து மொத்தத்தையும் அழிந்தது இந்தியா
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
இது மூன்றாவது முறையான தாக்குதல் என்பதால் இந்திய விமானப்படை எந்நேரம் வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் உரி, குப்வாரா மற்றும் பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. அதேபோல பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை இடைமறித்து தாக்கி அழித்திருக்கின்றன. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்திருந்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரா, பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவத் தளம் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதி என இரண்டையும் தாக்கி வருவதாக கூறியிருந்தார்.
இன்று ட்ரோன் தாக்குதலை தொங்கியதன் மூலம், பாகிஸ்தான் இந்த கூற்றை மேலும் உண்மை என நிரூபித்திருக்கிறது. ட்ரோன் தாக்குதல் காரணமாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. முன்னதாக இன்று மதியம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து, இரவு பிரதமர் நரேந்திர மோடியும் முப்படைகளின் தளபதிகளை சந்திருந்தார்.
நேற்று பாகிஸ்தான் நடத்தியிருந்த தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. குறிப்பாக எஸ் 400 எனும் வான் பாதுகாப்பு அம்சம் பாகிஸ்தானின் வான் வழி அத்து மீறலை முறியடித்திருக்கிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications