ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை
டெல்லி: கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ரஷ்யா தற்போது கட்டணம் வசூலிக்கிறது. அந்த வகையில் இந்தியா 425 சதவீதம் அதிக கட்டணத்தை செலுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்காக ரஷ்யாவை அளவுக்கு அதிகமாக நம்பியிருக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கி வந்த தள்ளுபடி விலையை அதிரடியாக ரத்து செய்துவிட்டு, தற்போது கூடுதல் 'பிரீமியம்' கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவிற்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ரஷ்யா, தற்போது தனது பிரீமியம் தொகையை 425% வரை உயர்த்தியுள்ளது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 2026-ல் எகிறிய இறக்குமதி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள களின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 158.5 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏப்ரல் 2026-ல் 195.3 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 23% அதிகமாகும்.
ஆனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால், இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி பில் (Import Bill) ஒரே மாதத்தில் 61.3% அதிகரித்து 15.4 பில்லியன் டாலராக எகிறியுள்ளது.
ரஷ்ய எண்ணெய்யின் ஆதிக்கம்
இறக்குமதி அளவு: ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து 67 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது மார்ச் மாதத்தை விட 27% அதிகம் என்பதோடு, இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 34.3% ஆகும்.
பணப் பரிவர்த்தனை: இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதி தொகையான 15.4 பில்லியன் டாலரில், ரஷ்யாவிற்கு மட்டுமே 5.8 பில்லியன் டாலர் (சுமார் 37.7%) செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் எண்ணெய் தேவையில் ரஷ்யாவின் பங்கு 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.
தள்ளுபடி டூ பிரீமியம்: 425% உயர்வு எப்படி?
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய காலகட்டத்தில் உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, இந்தியாவுக்கு ரஷ்யா பெருமளவு தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கியது. ஆனால், கடந்த மார்ச் 2026 முதல் இந்த தள்ளுபடி முறை மாறி, கூடுதல் 'பிரீமியம்' வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தது. ஏப்ரல் மாதத்தில் இந்த பிரீமியம் தொகை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஒப்பீடு: ஏப்ரல் மாதத்தில் மற்ற நாடுகளிடமிருந்து வாங்கிய கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு டன்னுக்கு $787.1 ஆக இருந்தது. ஆனால், ரஷ்யாவிடமிருந்து வாங்கிய எண்ணெய்க்கு இந்தியா ஒரு டன்னுக்கு $864.9 செலுத்தியுள்ளது.
425% அதிகரிப்பு: அதாவது, மற்ற நாடுகளை விட ரஷ்ய எண்ணெய்க்கு ஒரு டன்னுக்கு கூடுதலாக $77.8 பிரீமியம் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இந்த கூடுதல் பிரீமியம் தொகை வெறும் $14.8 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே மாதத்தில் இந்த கூடுதல் கட்டணம் 425% உயர்த்தப்பட்டுள்ளது இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
சரிந்த அமெரிக்காவின் பங்கு:
ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் எண்ணெய்யை வாங்கிய அதே வேளையில், அமெரிக்காவிடமிருந்து வாங்கும் அளவு பெருமளவு குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதி மதிப்பில் அமெரிக்காவின் பங்கு வெறும் 2.9% ஆகவும், அளவின் அடிப்படையில் 3.8% ஆகவும் சரிந்துள்ளது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.
மேற்கு ஆசியப் பதற்றத்தை சாதகமாக்கிக் கொண்டு ரஷ்யா விலையை உயர்த்தினாலும், வேறு வழியின்றி இந்தியா ரஷ்யாவையே தொடர்ந்து சார்ந்து இருப்பது சர்வதேச பொருளாதாரப் பார்வையாளர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகளை இந்தியா செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications