உலகில் ஒரே நாளில் அதிக கொரோனா .. 4வது இடத்தை பிடித்த இந்தியா!
டெல்லி: உலகில் ஒரே நாளில் அதிக கொரோனா கேஸ்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 39072 பேருக்கு தொற்று பாதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 18 கோடியே 97 லட்சத்து 2247 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும 5லட்சத்து 59 ஆயிரத்து 648 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் இந்தோனேஷியாவில் 56757 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 52789 பேருக்கும், இங்கிலாந்தில் 48553 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி அதிக பாதிப்பில் 4வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 39072 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. 544 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரத்து 875 பேருக்கு பாதித்துள்ளது.












Click it and Unblock the Notifications