"எங்க வேக்சினை அனுமதிங்க.. இல்லைன்னா நோ என்ட்ரி".. ஐரோப்பாவிடம் முஷ்டி முறுக்கிய இந்தியா.. பளார்!
டெல்லி: இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் போட்டவர்களை ஐரோப்பாவில் அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு குவாரன்டைன் விதி கட்டாயமாக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. எங்கள் வேக்சினை அனுமதித்தால் மட்டுமே உங்களின் வேக்சினை அனுமதிப்போம் என்று ஐரோப்பாவிடம் இந்தியா முஷ்டியை முறுக்கி உள்ளது.
உலகம் முழுக்க தற்போது வேக்சின் அரசியல் காட்டுத்தீ போல பரவிக்கொண்டு இருக்கிறது. வேக்சின் வாங்குவது ஆதிக்கம் செலுத்துவது, குறிப்பிட்ட வேக்சின் போட்டவர்களுக்கு மட்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதி கொடுப்பது, ஏழை நாடுகளின் வேக்சினுக்கு அனுமதி அளிக்க என்று உலகம் முழுக்க வேக்சின் அரசியல் புதிய பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது.
வேக்சின் வேறுபாடு தற்போது உலக நாடுகளுக்கு இடையிலான பிரிவினையை, தீண்டாமையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட வேக்சின் போட்டவர்களுக்கு மட்டுமே பல்வேறு நாடுகளில் பயண அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் சர்வதேச பிரச்சனையாக "வேக்சின் தீண்டாமை" உருவெடுத்துள்ளது.

மதிப்பு
முக்கியமாக இந்தியாவின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் போட்டவர்களுக்கு பல்வேறு நாடுகளில் வேக்சின் அனுமதி அளிக்கப்படவில்லை. கோவாக்சின் இன்னும் உலக சுகாதார மையம் மூலம் அனுமதிக்கப்படவில்லை. இன்னொரு பக்கம் கோவிஷீல்ட் சில நாடுகளால் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதாவது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் போட்டு, அந்த பாஸ்போர்ட் சான்றிதழை வைத்துக்கொண்டு நீங்கள் பல நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது.

ஐரோப்பா
முக்கியமாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் பாஸ்போர்ட் சான்றிதழுக்கு ஐரோப்பா அனுமதி மறுத்துள்ளது. கோவிஷீல்ட் வேக்சின் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்டர்செனகா இணைந்து உருவாக்கிய வேக்சின் ஆகும். இதை இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதே வேக்சினின் லண்டன் உற்பத்திக்கு ஐரோப்பா அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உற்பத்தியாகும் ஆஸ்டர்செனகா வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஒரே வேக்சின்
ஒரே வேக்சினுக்கு இரண்டு விதமான கொள்கைகளை வகுத்து இந்தியாவிடம் ஐரோப்பா பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் வேக்சின்களை மட்டம் தட்டும் விதமாக, தாழ்வாக பார்க்கும் வகையில், வேக்சின் தீண்டாமையை ஐரோப்பா கடைப்பிடித்து வருகிறது. ஐரோப்பாவில் தற்போதைய நிலைப்படி 4 வேக்சின்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேக்சின் அனுமதி
ஃபைசர் , மாடர்னா, லண்டன் வகை ஆஸ்டர்செனகா, ஜான்சனன் ஜான்சன் வேக்சின் ஆகிய வேக்சின்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டள்ளது. இவர்களுக்கு கிரீன் பாஸ் என்ற ஒன்றுக்கு அளிக்கப்படும். இந்த வேக்சின் போட்டவர்கள் மட்டுமே ஐரோப்பாவுக்குள் நுழைய முடியும். இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்ட் போட்டால் ஐரோப்பாவில் பயணிக்க முடியாது.
Recommended Video

உறுப்பு நாடுகள்
அதே சமயம் ஐரோப்பாவில் உள்ள உறுப்பு நாடுகள் 4 வேக்சின்களை தவிர வேறு வேக்சின்களுக்கு அனுமதி அளிக்க விரும்பினால் அளிக்கலாம் என்று ஐரோப்பா யூனியன் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் இந்த முடிவு இந்திய வெளியுறவுத்துறையை கோபப்படுத்தி உள்ளது. அதன்படி இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் போட்டவர்களை ஐரோப்பாவில் அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு குவாரன்டைன் விதி கட்டாயமாக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல் வருகிறது.

கட்டாயம்
எங்கள் வேக்சினை அனுமதித்தால் மட்டுமே உங்களின் வேக்சினை அனுமதிப்போம், இல்லையென்றால் உங்கள் வேக்சினுக்கும் எங்கள் நாட்டில் அனுமதி இல்லை என்று ஐரோப்பாவிடம் இந்தியா முஷ்டியை முறுக்கி உள்ளது. இதனால் இந்தியாவின் வேக்சினை ஐரோப்பா அனுமதிக்காத பட்சத்தில் ஐரோப்பியர்கள் எந்த வேக்சின் போட்டு இருந்தாலும் அவர்கள் இந்தியாவிற்குள் வரும் போது கட்டாய தனிமைப்படுத்துதல் செய்யப்படுவார்கள்.

மோதல்
இந்தியாவின் வேக்சினுக்கான பயண அனுமதியை பெற ஐரோப்பாவில் மத்திய அரசு முயன்று வரும் நிலையில், தற்போது மத்திய அரசு முதல்முறையாக ஐரோப்பா யூனியனிடம் முஷ்டியை முறுக்கி உள்ளது. இதற்கு ஐரோப்பா யூனியன் எப்படி எதிர்வினையாற்றும், அதில் இருக்கும் உறுப்பு நாடுகள் என்ன மாதிரியான எதிர்வினையாற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications