இந்தியாவில் ஒரே நாளில் 31,533 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 97.67 லட்சம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,67,372 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,92,39,671. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 15,75,810. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,79,94,611.
உலக நாடுகளில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக மிக உச்சமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் நாள்தோறும் சுமார் 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. ஒருநாள் கொரோனா மரணங்கள் தற்போது 3,000த்தை தாண்டியதாக உள்ளது.

2-வது இடம்
அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31, 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 97,67,372 அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 412 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,41,772 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,725 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 92,53,306. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3,72,293 மட்டும் என்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம்.

மகாராஷ்டிரா முதலிடம்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,64,348. கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,902 ஆகவும் உயர்ந்துள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications