நாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு - 4000 பேர் மரணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,980 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 3,29,113 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    India-வில் கொரோனாவின் 3rd Wave தவிர்க்க முடியாதது - அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீயாக பரவி வருகிறது. கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கொரோனாவிற்கு பலியாவோர் எண்ணிக்கை 4000 பேராக அதிகரித்து வருகிறது.

    வட மாநிலங்களில் மருத்துவமனைகளில் இடமில்லாமல் நோயாளிகள் அவதிப்பட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பல மாநில அரசுகள், முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தென்மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

    ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு

    ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு

    இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,980 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 3,29,113 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    நாடு முழுவதும் சிகிச்சை

    நாடு முழுவதும் சிகிச்சை

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,10,77,410 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,80,844 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 35,66,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள்

    பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள்

    மகாராஷ்டிராவில் 57,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிராவில் மட்டும் 13.98% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 50,112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 41953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 31,111 பேரும் தமிழகத்தில் 23,310 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    4000 பேர் மரணம்

    4000 பேர் மரணம்

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3980 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 920 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 353 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனாவிற்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+