இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு விவரம்:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50,129 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,68,511 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள்
24 மணிநேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
மேலும் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 62,077 ஆகவும் அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 70,78,123. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6,68,154 மட்டும். மாநிலங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

உலக அளவில் இந்தியா
உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரான்ஸுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ளது. அதேபோல் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

உலக அளவில் குணமடைந்தோர் பட்டியலில் முதலிடம்
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2-வது இடத்திலும் பிரேசில் 3-வது இடத்திலும் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலியில் மீண்டும் கொரோனா 2-வது அலை தாக்கம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications