இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,830; ஆக்டிவ் கேஸ்கள் 40,215-உச்சநீதிமன்றத்தில் கட்டுப்பாடுகள்!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,000-த்தை தாண்டியது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,830. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் கேஸ்கள் எண்ணிக்கை 40,215

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடனான கொரோனா பாதிப்பு நிலவரம்: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 358 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 37,093 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.08 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.73 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 3,761 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,00,079 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.88% வாராந்திர பாதிப்பு விகிதம் 3.81% இதுவரை மொத்தம் 92.30 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,96,796 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் நேற்று 2,14,242 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 7830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,676 ஆக பதிவாகி இருந்தது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,76,002.

நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்களின் தற்போதைய எண்ணிக்கை 40,215. டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 980 ஆக அதிகரித்தது.
உச்சநீதிமன்றத்தில் கட்டுப்பாடுகள்: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்துக்கு வருகை தரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் 441 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 40,215 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.09 சதவீதமாகும்.
தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.72 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,692 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,04,771 பேர்.
கடந்த 24 மணி நேரத்தில் 7,830 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 3.65% வாராந்திர பாதிப்பு விகிதம் 3.83% இதுவரை மொத்தம் 92.32 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,14,242 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications