ராஜஸ்தானில் 73 வயது முதியவர் ஓமிக்ரானுக்கு உயிரிழப்பு.. இந்தியாவில் முதல் பலி பதிவு!
டெல்லி: ராஜஸ்தானில் 73 வயது முதியவர் ஓமிக்ரானுக்கு உயிரிழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் பலி தற்போது பதிவாகியுள்ளது. இரு முறை ஓமிக்ரான் நெகட்டிவ் என முடிவு வந்த நிலையில் அந்த முதியவர் உதய்பூரில் டிசம்பர் 31 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை லவ் அகர்வால் கூறுகையில் ராஜஸ்தானில் 73 வயது முதியவர் ஓமிக்ரானால் இறந்துவிட்டார். இது தற்போது தொழில்நுட்ப ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது. அவர் வயது முதிர்ந்தவர். நீரிழிவு நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்தவர்.
அவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுப் பிரச்சினை உள்ளிட்டவை இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு டிசம்பர் 15 ஆம் தேதி கொரோனா உறுதியானது. இதையடுத்து ஓமிக்ரான் சோதனையும் செய்யப்பட்டது.

ஓமிக்ரான் பாதிப்பு
இதன் முடிவுகள் டிசம்பர் 25 ஆம் தேதி கிடைத்தது. அப்போதுதான் அந்த முதியவர் ஓமிக்ரானால் பாதித்துள்ளது தெரியவந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரு முறை ஓமிக்ரான் நெகட்டிவ் என வந்த நிலையில் அவர் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு, தைராய்டு உள்ளிட்ட நோய்களுடன் கொரோனாவுக்கு பிந்தைய நிமோனியாவால் அவர் உயிரிழந்தார் என்றார்.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 58,097 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலை வந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

8 நாட்கள்
இந்தியாவில் ஓமிக்ரானால் 2,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 8 நாட்களில் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் 6.3 மடங்கை காட்டிலும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி கொரோனா டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் (10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் அதில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாவது என்பதன் சதவீதம்) 0.79 சதவீதமாக இருந்தது. ஆனால் இன்று டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 5.03 சதவீதமாகியுள்ளது.

பாசிட்டிவிட்டி ரேட்
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துளளது. நாட்டில் உள்ள 28 மாவட்டங்களில் வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. அது போல் 43 மாவட்டங்களில் வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட் 5 முதல் 10 சதவீதமாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications