கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 24,963 பேர் வீடு திரும்பினர் - குணமடைந்தோர் விகிதம் 97.96%
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24,963 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 2,40,221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து வீடு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 24,963 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.96 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, இப்போது ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 21,257 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38,94,312ல் இருந்து 3,39,15,569 ஆக உயர்ந்து உள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறைவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் 24,963 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை 3,32,00,258ல் இருந்து, 3,32,25,221 ஆக உயர்வடைந்து உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.96 சதவீதம் ஆக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு நாட்டில் ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,50,127 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதம் ஆக உள்ளது. நாடு முழுவதும் 2,40,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 2,44,198 பேராக இருந்தது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கெரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. அதனை பரவலாக்கும் புதிய கட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 21ஆம் தேதி தொடங்கியது. இதன் மூலம் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 93,17,17,191 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 50,17,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications