சிம்லா ஒப்பந்தம் ரத்து.. இந்தியா கொடுத்த பதிலடி! வரலாற்று நிகழ்விலிருந்து பாகிஸ்தான் நீக்கம்
சிம்லா: இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. பாகிஸ்தான் இதனை தற்காலிகமாக ரத்து செய்திருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க மேசையிலிருந்து பாகிஸ்தான் கொடியை இந்தியா அகற்றியுள்ளது.
இந்த மேசையில் அமர்ந்துதான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ ஆகியோர் சிம்லா ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டிருந்தனர்.

கடந்த 22ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் நடந்திருக்கிறது. இங்கு புகழ்பெற்ற துலியன் ஏரி இரு இருக்கிறது. இதனை காண அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இப்படி வரும் பயணிகள் பஹல்காமிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குக்கு வருவார்கள். அங்கிருந்துதான் ஏரிக்கு போக வேண்டும்.
இந்த பள்ளத்தாக்குக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகள் பெரியதாக கிடையாது. குதிரை மூலமாக மட்டுமே போக முடியும். இதனை அறிந்துக்கொண்ட பயங்கரவாதிகள், உதவி கிடைப்பதற்கு நேரம் ஆகும் என்பதை தெரிந்துக்கொண்டு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா என உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சில ஸ்டாடர்ஜிக் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
அதாவது பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்துள்ளது. அதேபோல, புகழ்பெற்ற சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாகும்.
கடந்த 1971ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரையடுத்து இனி இதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது என்று இரு நாடுகளும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. அதுதான் சிம்லா ஒப்பந்தம். இது அமைதிக்கான ஒப்பந்தமாக பார்க்கப்பட்டது. இது ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் கையெழுத்தானது. இதற்கு கையெழுத்து போட பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ சிம்லாவுக்கு வந்திருந்தார்.
ஒருபுறம் பூட்டோவும், மறுபுறம் இந்திய பிரதமர் இந்திரா காந்தி என இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்து போட பயன்பட்ட மேசை இன்றும் சிம்லாவில் வரலாற்று சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் என இரு நாட்டின் கொடிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் இப்போது பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்திருப்பதால் அந்நாட்டின் கொடி மேசையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
மேசையில் தற்போது இந்திய கொடி மட்டுமே இருக்கிறது. வரலாற்று சின்னத்திலிருந்து பாகிஸ்தானை நீக்கியதற்கு ஒப்பானதாக இது பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications