இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,466 பேருக்கு கொரோனா பாதிப்பு- 460 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் ஒரே நாளில் 460 பேர் மரணமடைந்தனர்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது. அந்தந்த மாநிலங்கள் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு, மரணம், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிடுகிறது.

இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை விரிவாக வெளியிடுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,43,88,579 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 1,40,638 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 262 நாட்களில் இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இந்தியாவில் 460 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4,61,849 பேராகும்.
இதுவரை இந்தியாவில் மொத்தம் 109.63 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 52,69,137 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டன. நேற்று ஒரே நாளில் 11,961 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 33,780,047 ஆகும். அதாவது டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 98.25 சதவீதமாகும் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாகவும் உள்ளது.
தமிழகத்தில் 5,97,86,613 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்குள் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் போடுவதற்கு தமிழக சுகாதாரத் துறை முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் 835 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஒரே நாளில் 924 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 850 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27.10 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications