இந்தியாவில் அதிதீவிரமாகும் தொற்று: 3 மாதங்களுக்கு பின் 12,000-த்தை கடந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000-த்தை தாண்டியது! 24 மணிநேரத்தில் 12,213 பேருக்கு தொற்று
Recommended Video
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 10,000-த்தை தாண்டியதாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணிநேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,000-த்தை தாண்டியதாக பதிவாகி வந்தது.

11 பேர் மரணம்
கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 3 பேரும் மகாராஷ்டிராவில் 2 பேரும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தனர். தமிழகம், மேற்கு வங்கம், குஜராத், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் கொரோனவால் இறந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அபாயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 4,024 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முந்தைய நாள் பாதிப்பை ஒப்பிடுகையில் இது 36% அதிகரிப்பாகும். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,359 ஆக இருந்தது. அதன் பின்னர் மகாராஷ்டிராவில் தற்போதுதான் 4,000-த்தை தாண்டியதாக ஒருநாள் பாதிப்பு உள்ளது.

டெல்லி நிலவரம்
டெல்லியில் கொரோனா பாதிப்பு பாசிட்டிவிட்டி ரேட் என்பது 7.01% ஆக உள்ளது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1375 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் ஒருநாள் பாதிப்பு 2-வது நாளாக 1,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது. மும்பையில் மட்டும் 2,293 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஜனவரி 23-ந் தேதிக்கு பிந்தைய முதல் முறையான அதிகரிப்பாகும்.

ஆக்டிவ் கேஸ்கள்
மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 50,000த்தை தாண்டி இருக்கிறது, இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது 58,215 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த கொரோனா பாதிப்பில் 0.13% ஆகும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications