இந்தியாவில் வெகுவாக குறையும் பாதிப்பு- 24 மணிநேரத்தில் 12,830 பேருக்கு கொரோனா தொற்று- 446 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 12,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 446 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறோம்.

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று கணிசமான அளவு குறைந்து கொண்டே வருகிறது. நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13,000க்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 446 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,73,300. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,36,55,842. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,58,186.
நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 106,14,40,335. தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,59,272. இது கடந்த 247 நாட்களில் மிக குறைவானதாகும்.
இந்தியாவில் கேரளாவில்தான் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் 7,427 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது. மிசோரமில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பெரும்பாலான மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் இருக்கிறது.
கொரோனா மரணங்களில் கேரளாவில்தான் அதிகமாக பதிவாகி இருக்கிறது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 358 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 26 பேர்; தமிழகத்தில் 14 பேர் ; மேற்கு வங்கத்தில் 13 பேர்; கர்நாடகாவில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். எஞ்சிய மாநிலங்களில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 5-க்கும் கீழே பதிவாகி இருக்கிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications