டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16,764 - 220 பேர் உயிரிழப்பு; ஓமிக்ரான் கேஸ்கள்- 1270 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,764 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 220 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் உலக நாடுகளில் 18,68,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6,758 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். உலக நாடுகளில் 2,82,12,994 பேர் கொரொனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

India reports 16,764 new cases, 220 deaths in last 24 hours

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று 13,000 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு 91,361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 1270 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Recommended Video

    ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்

    மாநிலங்கள் வாரியாக ஓமிக்ரான் எண்ணிக்கை: மகாராஷ்டிரா-450; டெல்லி-320; கேரளா- 109; குஜராத்-97; ராஜஸ்தான்- 69; தெலுங்கானா- 62; தமிழகம்- 46; கர்நாடகா- 34; ஆந்திரா- 16; ஹரியானா-14; ஒடிஷா-14; மேற்கு வங்கம்-11 ; ம.பி- 9; உத்தரகாண்ட்-4 ; சண்டிகர்- 3; ஜம்மு காஷ்மீர்- 3.

    English summary
    India has reported 16,764 new cases, 220 deaths in the last 24 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X