அலறி அடித்து ஓடும் தொற்று.. 7 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் குறைந்தது கொரோனா.. மத்திய அரசு தகவல்
இந்தியாவில் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.. ஆனால், முழுமையாக குறையவில்லை.. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.. தடுப்பூசிகளை துரிதப்படுத்தும் பணி நடந்ததாலேயே, தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், 3வது அலை வரஉள்ளதால், அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன... கடந்த சில நாட்களுக்கு முன்பு, 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, பிறகு சற்று உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று, 22, 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று சற்று குறைந்திருக்கிறது.

பாதிப்பு
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதுகுறித்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.. அதில், மொத்த தொற்று பாதிப்பு 3 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.37 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம்
மேலும், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வார பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 12,297, மகாராஷ்டிராவில் 2,692, தமிழ்நாட்டில் 1,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. கொரோனா வைரஸ் பாதிப்பினால், கேரள மாநிலத்தில் 74, மகாராஷ்டிராவில் 41 பேர் உள்பட நாடு முழுவதும் 180 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,48,997 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனை
இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.. 1,39,207 பேர் உயிரிழந்துள்ளனர்.. கர்நாடகாவில் 37,819, தமிழ்நாட்டில் 35,650, கேரளாவில் 25,377 பேர் இந்த பலி எண்ணிக்கையில் அடங்குவார்கள்.. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து நேற்று 26,718 பேர் மீண்டுள்ளனர்.. இதுவரை 3 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 247 பேர் தொற்றில் இருந்து குணமலாகி டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. 2,64,458 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... இது நேற்றுமுன்தினத்தை விட 6,099 குறைவு ஆகும்...

தடுப்பூசி
நேற்று மட்டும் 23,46,176 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 90 கோடியே 79 லட்சத்துக்கு மேலாகும்.. இதுவரை மொத்தம் 57.42 கோடி மாதிரிகள் டெஸ்ட்கள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு, கட்டுக்குள் இருந்து வருகிறது என்பதும், தொற்று பாதிப்பு ஒட்டுமொத்தமாக குறைந்து வருகிறது என்பதும் நமக்கு ஆறுதல் செயலாகும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications