ஆறுதல்! 3வது நாளாக குறையும் கொரோனா - இப்படியே போச்சுன்னா பெட்டர்
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை மீண்டும் குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை விளாசி வருகிறது. நாட்டின் இந்த குடும்பங்களையும் இது விட்டுவைக்கவில்லை. அந்தளவுக்கு மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

ஒருபக்கம், தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ரெமிடிசிவிர் தட்டுப்பாடு நிலவுவதால், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியை கடந்திருக்கிறது. நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,57, 229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,68,147 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்திருக்கிறது.
அதேசமயம், தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 4.01 லட்சம், நேற்று முன் தினம் 3.92 லட்சம், நேற்று 3.68 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 3.57 லட்சமாக எண்ணிக்கை குறைந்துள்ளது.
தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 47ஆயிரத்து 133 ஆகும். நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 89 லட்சத்து 32 ஆயிரத்து 921 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications