இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 37,379 பேருக்கு தொற்று உறுதி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று மட்டும் 124 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,892 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் உள்ளன.

இந்தியாவில் அதிகரிப்பு
இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேர நிலவரப்படி 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 117 நாட்களில் மிக அதிகமான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது. மேலும் 124 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஓமிக்ரான் எண்ணிக்கை
கொரோனா பாதிப்பில் இருந்து 11,007 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 26,248 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றன ஆக்டிவ் கேஸ்கள். நாட்டில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,892 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகம்
நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இம்மாநிலத்தில் நேற்று 12,160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கு அடுத்ததாக மேற்கு வங்க மாநிலத்தில் 6,078 பேருக்கும் டெல்லியில் 4,099 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட முந்தைய மரணங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து மொத்தம் 71 உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 13 பேரும் மகாராஷ்டிராவில் 11 பேரும் நேற்று கொரோனாவால் மரணம் அடைந்தனர்.
Recommended Video

ஒரே நாளில் 99.28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்
நாடு முழுவதும் இதுவரை 146.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 99.28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 23.50 லட்சம்; 2-வது டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 33.70 லட்சம் பேர். 15-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 42.06 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications