கொரோனாவில் இருந்து மீண்ட 2,98,88,284 பேர் - நாடு முழுவதும் அதிகரிக்கும் நம்பிக்கை
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,98,88,284 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44,459 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,393 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44,459 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 911 பேர் கொரோனா பாதித்து மரணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசியது. தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கொரோனாவால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,07,52,950 பேராக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நாடு முழுவதும் 2,98,88,284 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடி பேரை எட்டப்போகிறது.
கெரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 97.19 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 17,90,708 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 42,70,16,605 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.42% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 911 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் மொத்தம் 4,05,939 பேராக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 4,58,727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 40,23,173 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36,89,91,222 டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 40 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வந்த நிலையில் தற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்றும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியவில் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். படிப்படியாக உயர்ந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு நவம்பர் 20ஆம் தேதி 1 கோடி பேரை தொட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. மே 4ஆம் தேதி 2 கோடி பேரை பாதித்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் 3 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. குணமடைபவர்கள் சதவிகிதம் உயர்ந்து வருவதால் மக்களிடையே நம்பிக்கை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications