இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- நேற்று 43,509 பேருக்கு தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 84,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

பிரேசில், ஈரான், இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்தியாவில் நேற்று 17,28,795 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 43,509 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் இதுவரை 46,26,29,773 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,465 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். நாட்டில் மொத்தம் 3,07,01,612 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் (ஆக்டிவ் கேஸ்கள்) எண்ணிக்கை 4,03,840 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் இது 1.28% ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 640 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் கேரளாவில்தான் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் 22,056 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மகாராஷ்டிராவில் 6,857, ஆந்திராவில் 2,010, தமிழகத்தில் 1,756, கர்நாடகாவில் 1,531 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாட்டில் இதுவரை மொத்தம் 45.07 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications