கொரோனாவில் இருந்து 2 கோடி பேர் குணமடைந்தனர்... இந்தியாவில் துளிர்க்கும் நம்பிக்கை

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 2,00,79,599 பேர் குணமடைந்துள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.37,04,893 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,43,144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 2,40,46,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 2,00,79,599 பேர் குணமடைந்துள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 37,04,893 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொத்து கொத்தாக பரவி வரும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் தினசரியும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்

மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் ஒரே நாளில் 3,43,144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 2,40,46,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

டாப் 5 மாநிலங்கள்

டாப் 5 மாநிலங்கள்

மகராஷ்டிராவில் 42,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கேரளாவில் 39,955 பேரும், கர்நாடகாவில் 35,297 பேரும், தமிழகத்தில் 30,621 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆந்திரா மாநிலத்தில் 22,399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2 கோடி பேர் மீண்டனர்

2 கோடி பேர் மீண்டனர்

கொரோனா பரவல் அதிகரித்தாலும் மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 3,44,776 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்க 2,00,79,599 பேராக அதிகரித்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

2,62,317 பேர் கொரோனாவிற்கு பலி

2,62,317 பேர் கொரோனாவிற்கு பலி

கொரோனாவிற்கு 4,000 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். மகராஷ்டிராவில் 850 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 344 பேர் அதிகபட்சமாக மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,62,317 பேராக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு 37,04,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+