இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 391 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் கொரோனாவால் 391 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் பாதிப்பு இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 2 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அந்த 2 பேருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் ஓமிக்ரான் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களை ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 9216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 391 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 8612 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 99,976. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இது மிக மிக குறைவான ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையாகும். இந்தியாவில் இதுவரை மொத்தம் 3,40,45,666 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 125.75 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications