டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோசம்.. இந்தியாவில் லாக்டவுனை நீக்கினால் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 8 லட்சமாகும்.. ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் லாக்டவுனை தளர்த்தினால் ஒரு மாதத்தில் 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மெக்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் கொரோனாவால் 3.32 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் 11 ஆயிரம் பேர் சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.

தற்போது 5-ஆவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது. மேலும் கொரோனாவுடன் வாழ பழகுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டு கொண்டார்.

வளைகாப்புக்கு வந்தவர் கொரோனாவால் பலி.. சட்டவிரோதமாக புதுவை வருபவர்களால் வேகமெடுக்கும் கொரோனா வளைகாப்புக்கு வந்தவர் கொரோனாவால் பலி.. சட்டவிரோதமாக புதுவை வருபவர்களால் வேகமெடுக்கும் கொரோனா

கொரோனா

கொரோனா

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மிக்சிகன் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது. இதன் ஆய்வறிக்கையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமான சூழலில் உள்ளது.

2 மாதங்கள்

2 மாதங்கள்

இந்த நேரத்தில் லாக்டவுனை நீக்கினால் இந்தியாவில் ஜூலை 15-ஆம் தேதி 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவது உறுதி. இந்த நிலை நீடித்தால் பிரேசில், ரஷ்யாவை இந்தியா முந்தி செல்லும் நிலை ஏற்படும். நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். ஆனால் அடுத்த 2 மாதங்களில் இது மிகவும் கடினமாக இருக்கும்.

உச்சம்

உச்சம்

மிக நீண்ட கால கணிப்புகள் அவர்களது வெப்சைட்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (ஹெர்டு இம்யூனிட்டி) அதிகரிக்கும் வரை நாடு முழுவதும் தொற்றுநோய் பரவ வரும் போது இந்தியாவிலும் உச்சத்தை தொடும் என்பதை எதிர்பார்க்கலாம் என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

கன்டெய்ன்மென்ட் பகுதி

கன்டெய்ன்மென்ட் பகுதி

வைரஸ் கன்டெய்ன்மென்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கேரளா, மும்பையின் தாராவி ஆகிய இடங்களில் கான்டாக்ட் டிரேசிங் மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் இந்த நடைமுறைகளை இந்தியா முழுவதும் அமல்படுத்துவது சற்று கடினம் ஆகும்.

English summary
India's cases may reach 8 lakh in a month if it drops lockdown, says University of Michigan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X