இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது- உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 2109 ஆகவும் உயர்ந்துள்ளது..

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 20, 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 779 ஆக அதிகரித்திருக்கிறது.
இம்மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்தில் 7796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 472 ஆக உயர்ந்துள்ளது. 3-வது இடத்தில் டெல்லி மாநிலம் உள்ளது. டெல்லியில் 6542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 73 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்ததில் 44 பேர் மரணமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 1824 பேர் குணமடைந்தும் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 3614 பேரும் ராஜஸ்தானில் 3708 பேரும் பஞ்சாப் மாநிலத்தில் 1762 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உ.பி.யில் 74 பேரை பலி கொண்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3373 ஆகும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications