டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43 லட்சத்தை கடந்தது.. உயிரிழப்பு 73 ஆயிரத்தை தாண்டியது!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையானது 43 லட்சத்தை எட்டியுள்ளது.. உலக அளவில் கொரோனா பாதிப்பல் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை காலை மத்திய சுகாதார அமைச்சின் கொரோனா அறிக்கையின்படி , இந்தியாவில் 42,80,422 பேருக்கு தொற்று இருந்தது. ஆனால் அதன்பிறகு ஒவ்வொரு மாநிலங்களாக இரவு வரை அப்டேட் செய்தன. இதன்படி இந்தியாவில் நேற்று நள்ளிரவின் படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனாவால் 43,67,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3396027 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது 896884 பேர் மருத்துவனைகளில் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை இந்தியாவில் 73923 பேர் பலியாகி உள்ளனர்.

Indias Covid case tally crosses 43 lakh-mark, death toll nears 73,000

நேற்று ஒரு நாளில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 20,131 பேருக்கு மகாராஷ்டிராவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 6,743, தமிழ்நாடு 5,684, டெல்லி 3,609 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் 1,864 கேஸ்கள், பஞ்சாப் 1,964 கேஸ்கள், உத்தரகண்ட் 658 கேஸ்கள், குஜராத் 1,295 கேஸ்கள், மேற்கு வங்கம் 3,091 கேஸ்கள், ஜம்மு காஷ்மீர் 1,355 கேஸ்கள், மேகாலயா 42 கேஸ்கள் மற்றும் மிசோரமில் 9 கேஸ்கள் பதிவாகி உள்ளன.

வைட்டமின் டி குறைவு.... கொரோனா தொற்று... உயிரிழப்பை அதிகரிக்கும்... புதிய ஆய்வில் தகவல்!!வைட்டமின் டி குறைவு.... கொரோனா தொற்று... உயிரிழப்பை அதிகரிக்கும்... புதிய ஆய்வில் தகவல்!!

திங்களன்று, இந்தியாவில் 90,802 பேருக்கு தொற்ற பரவி உலக சாதனையாக இருந்தது. இந்தியா தொற்று பாதிப்பில் பிரேசிலை முந்தி அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவாவிற்கு நேற்று உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கணக்குப்ப, கடந்த 24 மணி நேரத்தில் 1,133 பேர் கொரோனாவில் பலியாகி உள்ளனர். இருப்பினும், புதிய தினசரி கேஸ்கள் 75,809 ஆக இருந்தது, இது கடந்த வாரத்தில் மிகக் குறைவு.ஆகும்.

English summary
the total number of people who have tested positive for Covid-19 in India crossed the 43 lakh-mark on Tuesday while the country continues to remain at the second spot in the global tally of Covid-19 cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X