புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாகும் கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகளும் உணர்த்துவது என்ன
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா, குறிப்பாகத் தினசரி உயிரிழப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போது நாட்டிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
ஒருபுறம் கொரோனாவாலும், மறுபுறம் சரியான நேரத்தில் கொரோனா படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமலும் பலர் உயிரிழந்தனர். இப்போது தான் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

கொரோனா 3ஆம் அலை
இந்தச் சூழலில் கொரோனா 3ஆம் அலை பற்றி வெளியாகும் தகவல்களும் அச்சமூட்டும் வகையில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பின் விகிதம் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா, தினசரி உயிரிழப்பு விகிதம் மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த ஜூலை 4ஆம் தேதி முதலே 3ஆம் அலை தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தவர்களில் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவாவும் ஒருவர்.

daily death load
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் எத்தனை பேர் உயிரிழதிருக்கின்றனர் என்பதைக் குறிக்கும் daily death load கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார். ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 7 வரையிலான 15 நாட்களில் மட்டும் 10 நாட்கள் இந்த daily death load அதிகரித்துள்ளது. இது கொரோனா 3ஆம் அலை மோசமாகி வருவதையே காட்டுவதாக டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

அரசு தரவுகள்
இது குறித்து டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா மேலும் கூறுகையில், "ஜூலை 4 முதல் daily death load ஏற்றம் இறக்கம் என இரண்டையும் மாறி மாறிக் கொண்டுள்ளது. வழக்கமாக உயிரிழப்புகள் குறையத் தொங்கும்போதோ அல்லது அதிகரிக்கத் தொடங்கும்போதோ தான் இப்படி நிகழும். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்டதை விட இந்த முறை ஏற்ற இறக்கம் மிக மோமாக உள்ளது. அரசு வெளியிடும் தரவுகள் துல்லியமாக இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த காலங்களில் கொரோனா உயிரிழப்புகள் சரி செய்யப்பட்டாலும், அரசு வெளியிடும் தரவுகளின் துல்லியம் பற்றிய சந்தேகங்கள், குறிப்பாக இரண்டாவது அலைக்குப் பிறகு அதிகரித்துள்ளது. இதனால் எதையும் 100% உறுதியாகக் கூறிவிட முடியாது.

Patient Load அதிகரிப்பு
பொதுவாக இன்று ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சமாக இருக்க வேண்டும். Patient Load எனப்படும் இது எப்போதும் ஒன்று அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 2ஆம் அலை ஏற்பட்ட போது, இது 2.2 வரை சென்றது. இப்போது கடந்த சில நாட்களாக இது மீண்டும் 1ஐ கடந்துள்ளது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications