சீனாவுக்கு செக்.. ஜப்பான், தென் கொரியாவுடன் கைகோர்க்கும் இந்தியா!
டெல்லி: அரிய மண் காந்தங்கள் மற்றும் தனிமங்கள் ஏற்றுமதியில் சீனாதான் தற்போது கெத்து காட்டி வருகிறது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மொத்தமாக சீனாவை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில், அரிய மண் காந்தங்களை தோண்டி எடுக்க ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் இந்தியா இணைய இருக்கிறது.
இந்தியாவின் பொதுத்துறை சுரங்க நிறுவனமான ஐஆர்இஎல், அரிய மண் காந்தங்களின் வணிக உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஜப்பானிய மற்றும் தென் கொரிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரிய மண் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளையும் ஐஆர்இஎல் அணுகி வருகிறது. இந்தத் திட்டங்கள் அரசுக்கு இடையேயான உறவுகள் மூலம் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. மட்டுமல்லாது அரசு தரப்பிலிருந்தும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை.
அரிய மண் காந்தங்களையும், தனிமங்களையும் மண்ணிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். இதற்கான டெக்னாலஜி ஒரு சில நாடுகளிடம் மட்டும்தான் இருக்கிறது. நம்மிடம் இந்த வசதிகள் இல்லை. சீனா இந்த டெக்னாலஜியை பெரிய அளவில் வைத்திருப்பதால் உலகம் முழுவம் அரிய மண் காந்தங்களின் ஏற்றுமதியை அது கட்டுப்படுத்தி வருகிறது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்ததால் தற்போது இந்த ஏற்றுமதியை சீனா நிறுத்தியிருக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, அரிய மண் காந்தங்கள் மற்றும் தனிமங்களின் ஏற்றுமதியை கையில் எடுக்க இந்தியா முடிவெடுத்திருக்கிறது. வாகன உற்பத்தி நிறுவனங்கள், விண்வெளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரிய மண் காந்தங்களின் தேவை இருக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில் இனி எதிர்காலமே இதுதான். இந்நிலையில், ஜப்பானிய வர்த்தக நிறுவனமான டொயோட்டா சுஷோவின் துணை நிறுவனமான டோயோட்சு ரேர் எர்த்ஸ் நிறுவனத்துடன், இந்தியாவின் ஐஆர்இஎல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றால் இந்தயாவில் அரிய மண் காந்த பிரித்தெடுப்பு ஆலை ஜப்பான் உதவியுடன் அமைக்கப்படும். அதேபோல இதற்காக தென்கொரியாவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறுது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மலாவி மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து மண் எடுத்து கொண்டுவரப்பட்டு, அது இந்தியாவில் வைத்து பிரித்து காந்தமாகவும், அரிய தனிமமாகவும் மாற்றப்படும். ஆனால் இதற்கெல்லாம் சில ஆண்டுகள் ஆகும். இருப்பினும் திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியா, புதிய சகாப்தத்திற்குள் நுழையும்.
இன்றைய தேதியில் உலகம் முழுவதும் அரிய காந்தங்கள் சப்ளையில் சீனா 99% அளவு இடத்தை பிடித்திருக்கிறது. சீனாவுடன் நிறைய நாடுகளுக்கு பஞ்சாயத்து இருப்பதால், வேறு நாடுகளிலிருந்து இந்த காந்தங்கள் கிடைக்காதா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே இந்திய முயன்று வருகிறது.
இதற்கு சில சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் காந்தங்களை பிரித்தெடுக்கும் செயல்முறை லேசுபட்ட காரியம் கிடையாது. சாதாரண மண்ணிலிருந்து காந்தங்களும், தனிமங்களும் அடையாளம் காணப்பட வேண்டும். பின்னர்தான் அவை பிரித்தெடுக்கப்பட வேண்டும். இந்த செயல்முறைக்கு உயர்ந்த தொழில்நுட்ப அறிவு தேவை. அதேபோல இதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆபத்தானவையாகும். இதையும் நாம் சாமளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications